Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

வணிக

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காக முதலீடு செய்யப்பட்ட 97 மில்லியன் டொலர் நிதி இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காக முதலீடு செய்யப்பட்ட 97 மில்லியன் டொலர் நிதி இலங்கை துறைமுக அதிகார சபைக்குவழங்கப்பட்டுள்ளது.

சீன மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்த நிதியை அதிகார சபைக்கு இரண்டாம் கட்ட முதலீடுடாக வழங்கியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி அரசதனியார் கூட்டுத் திட்டமாக முன்னெடுக்கப்படுகிறதுஇதன் வர்த்தக நடவடிக்கைகள்கடந்த டிசம்பர் மாதம் குறித்த சீன கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டன.

அந்த வேளையில்முதலாம் கட்ட முதலீடாக 292 மில்லியன் டொலர் நிதி இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதுஇரண்டாம் கட்டகொடுப்பனவாக இந்த 97 மில்லியன் டொலர் நிதியுடன் மொத்தமாக 389 தசம் நான்கு மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இறுதி கட்ட முதலீடு ஐந்து மாதங்களில் வழங்கப்படும்இந்த முதலீடுகள் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் பலமடையச் செய்யும்என்று அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக்க தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி