Sri Lanka Brodcasting Corporation

Tue02202018

Last updateTue, 20 Feb 2018 10am

வணிக

இந்த வருடம் புதிதாக 100 சதொஸ விற்பனை நிலையங்களை திறந்து வைக்க நடவடிக்கை.

இந்த வருடம் மேலும் 100 சதொஸ விற்பனை நிலையங்களை திறந்து வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் நாடளாவிய ரீதியில் 400 சதொஸ விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. கடந்த இரண்டு வார காலத்திற்குள் மட்டும் புதிதாக 28 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் திறந்து வைக்கப்படவுள்ள விற்பனை நிலையங்களில் 25 வீதமானவை, அதிவிசேட சுப்பர் மெகா விற்பனை நிலையங்களாக அமையவுள்ளன. இதில் முதலாவது அதிவிசேட மெகா விற்பனை நிலையம் இன்று காலை வெலிசர பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை 25 நடமாடும் விற்பனை வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் இந்த நடமாடும் விற்பனை சேவையை மேற்கொள்ளும் வாகனங்களின் எண்ணிக்கையை 100ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் விற்பனை சேவை வழங்கும் வாகனங்கள் அரச நிறுவனங்கள், கிராம சந்தைகள், சன நடமாட்டம் உள்ள இடங்கள் போன்ற பல்வேறு பிரதேசங்களில் தமது விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். நுகர்வோரின் நன்மை கருதி, அவர்களுக்கு சௌகரியமான நேரங்களில் தரமான பொருட்களை சாதாரண விலையில் விற்பனை செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி