Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateWed, 22 Nov 2017 8pm

வணிக

நியாயமான விலையில் அரிசி விற்பளை செய்யப்படாத பட்டசத்தில் அரிசிக்கு கட்டுப்பாட்டு அறிவிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவிப்பு

தொகை மற்றும் சில்லறை சங்கம் நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யாத பட்சத்தில் அடுத்த வாரத்தில் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும். இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நியாயமான விலையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும், அது இதுவரை இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் ரிஷாத் பதியூத்தீன் தெரிவித்தார்.

வாழக்கைச் செலவு தொடர்பான குழுவின் சிபார்சுக்கு அமைவாக ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. தற்பொழுது இந்தியாவில் இருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா, மியன்மார், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதற்காக 700 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரிசியின் தரத்தை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் அரிசி நாடு முழவதிலும் நிவாரண விலையில் தொகையாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படும். மொத்த விளபாரிகளுக்கு சதொச மூலம் அரிசி விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சதொச மூலம் வெள்ளைப் பச்சை அரிசி ஒரு கிலோ 63 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒரு கிலோ 74 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சம்பா ஒரு கிலோ 84 ரூபாவாகும். இதேபோன்று 65 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி