Sri Lanka Brodcasting Corporation

Tue10242017

Last updateTue, 24 Oct 2017 9am

வணிக

நுகர்வோருக்கு 65 ரூபாவுக்கு தேங்காயை வழங்க நடவடிக்கை.

ஒரு தேங்காயின் விலை 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய தெங்கு செய்கைசபை நடவடிக்கை எடுத்துள்ளது. நகர் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு நேரடியாக ஒரு தேங்காயை 65 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை பத்து இலட்சம் தேங்காய் சந்தைக்கு விடப்படும் என்று சபையின் தலைவர் கபில யக்கந்தாவல தெரிவித்தார். இதற்காக நடமாடும் வாகனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. அரச காணிகளில் உள்ள தேங்காய்கள் இதற்காக பயன்படுத்தப்படும். சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் தேங்காய் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இதற்கமைய முதல் கட்டமாக சதொச விற்பனை நிலையங்களுக்கு 50 ஆயிரம் தேங்காய்கள் வழங்கப்பட இருக்கின்றன.

ஒரு தேங்காய் சந்தைக்கு 70க்கும், 75 ரூபாவுக்கும் இடையில் விற்பனை செய்யப்படுவது அவசியமாகும். ஆனால், நுகர்வோரை சுரண்டும் வகையிலான சில இடைத் தரகர்களின் செயற்பாட்டினால் தேங்காயின் விலை அதிகரித்திருக்கிறது. அரசாங்கமும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தினால் ஒரு தேங்காயின் விலை 80 ரூபாவரை குறைவடைந்திருக்கிறது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி