Sri Lanka Brodcasting Corporation

Tue10242017

Last updateTue, 24 Oct 2017 9am

வணிக

அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன.

பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட இருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றுக் கூடிய வாழ்க்கைச் செலவின குழுக் கூட்டத்தின்போது ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியதாக சதோச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அரிசி, பெரியவெங்காயம், ரின் மீன், பால்மா, நெத்தலி உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட இருக்கின்றன. ஒரு கிலோ நாட்டரசி 74 ரூபாவிற்கும் ஒரு கிலோ சிவப்பு அரிசி 75 ரூபாவிற்கும் ஒருகிலோ சம்பா அரிசி 84 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ 88 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது. கைக்குத்தல் அரிசிக்கு உயர்ந்த பட்ச கிராக்கி நிலவுகிறது. இந்த வகை அரிசி ஒரு கிலோ 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ நெத்தலி 535 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதோடு, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 125 ரூபாவாகும். ஒரு கிலோ உள்நாட்டு உருளைக் கிழக்கு 130 ரூபாவாகும். ஒரு கிலோ சீனியின் விலை 107 ரூபாவாகும். ஒரு கிலோ பருப்பு 152 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது. ஒரு கிலோ கோதுமை மா 86 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக இந்தப் பொருட்களை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம். மீன், தேங்காய் என்பனவும் சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன. தற்சமயம் 370 சதோச கிளைகள் காணப்படுகின்றன. விரைவில் 30 கிளைகள் புதிதாக திறக்கப்படும் என்று அவர் கூறினார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி