Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateTue, 21 Nov 2017 8pm

வணிக

பொலித்தீன் பாவனைக்கான தடை இன்று அமுலுக்கு வருகிறது.

 

பொலித்தீனுக்கு பதிலாக சுற்றாடல் நேய மாற்று வழிகள் நோக்கி மக்களை திருப்பும் முயற்சிகள் நாட்டுக்குள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் அடிப்படையில், பொலித்தீன் பைகள், சொப்பிங் பேக், மதிய உணவு பொலித்தீன் விரிப்புக்கள் மற்றும் பொலிஸ்டரின் பெட்டிகளின் பாவனையும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனையும் வழங்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவிக்கிறது.

இந்த பொலித்தீன் தயாரிப்புக்களுக்கு மாற்றுத் தீர்வாக ஹென்னானிகல ஆதிவாசிகளுக்கு ஓலைகளை பயன்படுத்தி பைகளை தயாரிப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற ஆதிவாசிகள்  ஒலைப்பைகளை தயாரித்து சந்தையில் விற்பனை செய்ய தயாராக இருக்கிறார்கள்.

இதுபற்றி ஹென்னானிகல ஆதிவாசிகளின் தலைவர் தலவாரியே குணபண்டா எமது நிலையத்திற்கு கருத்து வெளியிட்டார். சுற்றாடலை பாதுகாக்கும் முயற்சியில்  பங்களிப்பு வழங்கி, ஓலை பைகளை தயாரித்து வழங்க தமது சமூகம் தயாராக உள்ளதென அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி