Sri Lanka Brodcasting Corporation

Sun09242017

Last updateFri, 22 Sep 2017 8pm

வணிக

உத்தேச வரிச் சட்டமூலத்தின் ஊடாக பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு.

 

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது மக்களின் பொறுப்பாகும் என வயம்ப பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஆமிந்த மெத்சில தெரிவித்துள்ளார். அரசாங்கம் புதிதாகக் கொண்டுவரும் வரி சட்டமூலத்தின் ஊடாக நாட்டில் வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய வரி சட்டமூலத்தின் ஊடாக வரிகளை தளர்த்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 35 வகையான வரிகள் காணப்படுகின்றன. இதன் சிக்கல் தன்மையை நீக்கி, தேவையில்லாத வரிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று திரு.ஆமிந்த மெத்சில குறிப்பிட்டார். இலங்கை வானொலியில் இடம்பெற்ற 'சுபாரதி' கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். மக்களுக்குத் தேவையான சேமநலன்களை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த வரி அறவீட்டின் நோக்கமாகும். கடந்த காலத்தில் லெம்போகினி போன்ற வாகனங்களுக்காக வரி விடுதலை அளிக்கப்பட்டது. இதன் மூலம் மேல் வகுப்பினர் விசேட சலுகையைப் பெற்றனர். அதேபோல், மாருதி கார், சீனி போன்ற தேவையான பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் சாதாரண மக்கள் மீது வரி சுமத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்களுக்கு நன்மைகிட்டும் வகையில் வரிகளில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி