Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

வணிக

குப்பைகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பம்;.

 

இலங்கையில் முதல் தடவையாக குப்பைகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு நடைமுறைப்படுத்தும் இந்த வேலைத் திட்டத்திற்கு குப்பையின் பலம் என பெயரிடப்பட்டுள்ளதுகுப்பையை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு நிலையங்களின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் வியாழக்கிழமை கெரவளப்பிட்டியவில் ஆரம்பமாகும். இரண்டு தனியார் நிறுவனங்கள் இதற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. இரண்டாயிரத்து 700 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மின் நிலையங்களின் மூலம் 20 மெஹாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்குள் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும். இதற்கு இணைவாக புத்தளம் அறுவாக்காடு பிரதேசத்தில் தீங்கற்ற வகையில் குப்பை சேகரிப்பு மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி