Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

வணிக

ஜிஎஸ்பி.பிளஸ் வரிச் சலுகையின் காரணமாக ஐரோப்பிய வர்த்தக சந்தையில் போட்டி மிகுந்த பொருள் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக ஆரம்ப கைத்தொழில் துறை அமைச்சர் தெரிவிப்பு.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்தமையால் போட்டித் தன்மையுடன் மீண்டும் ஐரோப்பிய சந்தையில் ஏழாயிரத்து 200 பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய ஆற்றல் இலங்கைக்கு கிடைத்திருப்பதாக ஆரம்ப கைத்தொழில்துறை அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். 29 நாடுகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பில் 550மில்லியன் மக்களிடையே பொருட்களை பரிமாறக்கூடிய வர்த்தக செயற்பாட்டுக்கான வசதிகளை வழங்கக்கூடியதே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையாகும் என்றும் அமைச்சர் கூறினார். எமது நிலையத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் இன்று காலை கலந்து கொண்டபோதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
எதிர்வரும் சில வருடங்களில் உலகின் பாரிய வர்த்தக சந்தையாக ஆசிய சந்தை தரமுயரும் என்றார். ஆடைத் தொழில்துறை ஏற்றுமதியில் பங்களாதேஷ் போன்ற நாடுகள் குறைவான சம்பளம் மற்றும் குறைவான செலவு ஆகியவற்றின் அடிப்படையில் உலக சந்தைக்கு குறைந்த விலையில் தயாரிப்புகளை விநியோகித்து வருகிறது. எமது நாட்டின் தரமான தயாரிப்பின் காரணமாக சந்தையில் எமது தயாரிப்புக்களுக்கு பெரு வரவேற்பு உண்டு என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி