Sri Lanka Brodcasting Corporation

Sun12172017

Last updateSun, 17 Dec 2017 8am

வணிக

லங்கா சதொச இலாபத்தை ஈட்டும் நிலையை அடைந்துள்ளது.

லங்கா சதொச நிறுவனம் தற்சமயம் 

இலாபமீட்டும்நிறுவனமாக மாற்றம் பெற்றுள்ளது என அமைச்சர் ரிசாத்பதியூதீன் தெரிவித்துள்ளார். சமகால அரசாங்கம்ஆட்சியை பொறுப்பேற்கும் வேளையில் சதொச நிறுவனம்நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. மேலும் இந்தநிறுவனத்தின் களஞ்சியசாலைகளில் கலாவதியானபொருட்கள் தேங்கி காணப்பட்டன. பல வருடங்களாகஉரிய கணக்கு ஆவணங்கள் பேணப்படவில்லை. சதொசகிளை அலுவலங்கள் அந்தக் காலத்தில் வலயமைப்பாகஇயங்கவில்லை. ஆனால், சமகால அரசாங்கம் இதனைபொறுப்பேற்ற பின்னர் இலாபமீட்டும் நிறுவனமாக லங்காசதொச மாற்றமடைந்தது. மேலும் நாடாளவிய ரீதியில் பலகிளை அலுவலங்கள் அமைக்கப்பட்டு, பலமானவலயமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கலாவதியான பொருட்கள் அனைத்தும்அகற்றப்பட்டுள்ளன. பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டுமண்டத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் ரிசாத்பதியூதின் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில்  அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்லங்கா சதொச நிறுவனத்திற்கு பல்வேறு உதவிகளைசெய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வருடஇறுதிக்குள் சதொச கிளைகளின் மொத்த எண்ணிக்கை500 ஆக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதன் பின்னர் புதிய கிளை அலுவலகங்கள் திறக்கப்படமாட்டாது. கூட்டுறவு துறையை பலப்படுத்தும் நோக்கில்வேறு நிறுவனங்களில் முகவராக செயற்படுவர்களையும்சேவையில் உள்வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமமந்திரி ஆகியோர் தலைமையில் நாடாளவிய ரீதியில்ஒரேவேளையில் 50 சதொச கிளை அலுவலங்கள் திறந்துவைக்கப்படும். தனியார் நிறுவனங்களோடுபோட்டியிடக்கூடிய வகையில் லங்கா சதொச மாற்றம்பெற்றுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி