Sri Lanka Brodcasting Corporation

Sun03262017

Last updateFri, 24 Mar 2017 7pm

வணிக

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களக்குத் தேவையான உணவு, உடுதுணிகள் உள்ளிட்ட பொருட்களை போதியளவில் விநியோகிப்பதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தயார்நிலையில்.

 

தமிழ்சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்குதேவையான உணவு மற்றும் உடுதுணிகள் உள்ளிட்டபொருட்கள் தேவையான அளவில் சதொச கூட்டுறவுமற்றும் தனியார் நிறுவனங்களில் கொள்வனவு செய்துகொள்ள முடியும்சதொச நிறுவனத்தின் தலைவர்ரி.எம்.கே.பி.தென்னக்கோன் எமது நிலையத்திற்கு இதுதொடர்பாகத் தெரிவிக்கையில் லக் சதொச மூலம்நுகர்வோருக்குத் தேவையான அனைத்துப்பொருட்களையும் விநியோகிப்பதற்கு ஒழுங்குகள்மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார். 50 லக்சதொசகிளைகளை திறக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்நுகர்வோரின் வசதிக்காக இம் மாதம் இறுதி முதல்புத்தாண்டு காலம் நிறைவடையும் வரையில் சதொசகிளைகள் திறந்திருக்கும் நேரங்கள் நீடிக்கப்பட்டுள்ளனபுத்தாண்டுக்காக தனியார் துறையினர் தயாராகஇருப்பதாகவும் தேவையான பொருட்களை இறக்குமதிசெய்ய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்இத்துறையுடன் தொடர்புடைய ஏற்றுமதி வர்த்தகசங்கத்தின்த லைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளைதமிழ்சிங்கள புத்தாண்டை முன்னிட்டுதமது சொந்த இடங்களுக்கு சொல்லும் மக்களின்வசதிக்காக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும்தனியார் பஸ்கள் மற்றும் ரயில் சேவைகள்நடத்தப்படுமென்றும் இத்துறையை சேர்ந்த தலைமைஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்ரயில்வேதிணைக்களத்தின் முகாமையாளர் விஜய சமரசிங்ஹகருத்துத் தெரிவிக்கையில்அடுத்த மாதம் 7ம் திகதி முதல்17ம் திகதி வரையில் வழமையான ரயில் சேவைகளின்எண்ணிக்கை அதிகரிக்கப்படுமென்று தெரிவித்தார்மேலதிகமாகவும் ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும்நாளை முதல் இந்த நேர அட்டவணை குறித்துபொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தப்படும்இலங்கைபோக்குவரத்துச் சபையின் விசேட பஸ் சேவை எதிர்வரும்6ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடத்துவதற்குதிட்டமிடப்பட்டிருப்பதாக அதன் தலைவர் ரமால்சிறிவர்த்தன எமது நிலையத்திற்கு தெரிவித்தார்பியகமகட்டுநாயக்கமீரிகம போன்ற தொழில் பேட்டைகளுக்குஅருகாமையில் இருந்து விசேட பஸ் சேவைகள் நடத்தப்படஉள்ளனஇதற்கு மேலதிகமாக தனியார் பஸ் சேவைஅடுத்த மாதம் 7ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென்றும்அமைச்சின் ஆணைக்குழுவின் தலைவர்எம்..பி.ஹேமச்சந்திர தெரிவித்தார்.             

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி