Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

வணிக

இலங்கை சீனி நிறுவனம் கடந்த வருடத்தில் 116 கோடி ரூபா வருமானத்தைப் பெற்றுள்ளது.

இலங்கை சீனி நிறுவனம் கடந்த வருடத்தில் 116 கோடி 20

 இலட்சம் ரூபா இலாபத்தைப் பெற்றிருப்பதாக அந்தநிறுவனத்தின் தலைவர் நவீன் அதிகாரம்தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் நிறுவனம் அரசாங்கத்திற்கு 60 கோடிரூபாவை வரிப்பணமாக செலுத்தியுள்ளது. நிறுவனம்2015ம் ஆண்டில் 103 கோடி ரூபாவும், 2014ம் ஆண்டில் 21 கோடி ரூபாவும் நட்டத்தை எதிர்கொண்டிருந்தது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஜனாதிபதிமற்றும்  இதுசம்பந்தப்பட்ட அமைச்சரின் வழிகாட்டல்காரணமாக சிறப்பான முகாமைத்துவம் மற்றும் உரியதிட்டத்திற்க அமைய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டதனால் இலாபம் ஈட்டப்பட்டதாகநிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை சீனி நிறுவனத்தன் கீழ் பெலவத்த, செவனகல ஆகிய இரண்டு தொழிற்சாலைகள்செயற்பட்டு வருகின்றன. இரண்டு தொழிற்சாலைகளிலும்7 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தஇரண்டு தொழிற்சாலைகள் மூலம் இப்பிரதேசத்தில் உள்ளசுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைந்துவருவதாக தலைவர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு தேவையான சீனியில் பெருந்தொகை இன்னும்இறக்குமதி செய்யப்படுகின்றது. மேலும் பல சீனித்தொழிற்சாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம்திட்டமிட்டிருப்பதாக நிறுவனத் தலைவர் தெரிவித்தார். முடிந்த வரையில் சீனி இறக்குமதியை குறைப்பதற்காகசீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுஎன்றும் அவர் கூறினார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி