Sri Lanka Brodcasting Corporation

Thu02222018

Last updateWed, 21 Feb 2018 8pm

வணிக

தரச்சான்றிதழ் இல்லாமல் தீப்பெட்டிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு சீல்

இலங்கை தர நிர்ணய சபையின் தரச்சான்றிதழ் இல்லாமல் தீப்பெட்டிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலை நிட்டம்புவ பனாவலையில் இயங்கியதாகவும் இதற்கு நேற்று சீல் வைத்ததாகவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. அதிகார சபைக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இங்கு தரச்சான்றிதழ் இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்ட 28 ஆயிரத்திற்கு மேற்பட்ட தீப்பெட்டிகளை நுகர்வோர் அதிகார சபை கைப்பற்றியுள்ளது. இவற்றின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவைத் தாண்டுகிறது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி