Sri Lanka Brodcasting Corporation

Wed06282017

Last updateMon, 26 Jun 2017 10am

வணிக

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலையத்திற்கான ஒப்பந்தம் எதிர்வரும் சனிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.

 

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் சனிக்கிழமை கைச்சார்த்திடப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சரவையின் அங்கிகாரமும் கிடைத்துள்ளது. முதலீட:டு ஒப்பந்ததத்தின் கீழ் 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் உரிய காணிகள் வழங்கப்பட இருக்கின்றன. ஹம்பாந்தோட்டை மக்களின் செயற்றிட்டங்கள் பயனற்ற திட்டங்களாக மாறியிருக்கின்றன. இவற்றினால் அரசாங்கம் வருடாந்தம் 60 கோடி ரூபாவை நட்டமாக சந்திப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மக்களுக்கு சுமையை ஏற்படதாக வகையில் வினைத்திறனாக இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும் என்றும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்துவெளியிட்டார். 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி