Sri Lanka Brodcasting Corporation

Tue02212017

Last updateTue, 21 Feb 2017 8am

வணிக

இலங்கை - இந்திய கடற்றொழில் பேச்சுவார்த்தையில் சாதகமான பெறுபேறு – அடுத்த சுற்று பேச்சு ஏப்ரலில்.

தமது மீனவர்கள் பயன்படுத்தும் பொட்டம் ட்ரோலிங் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்கப்போவதில்லை என இந்திய அரசாங்கம் கூறியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய அரச பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான இரண்டு நாள் பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாரம்பரிய கடற்றொழில் முறைகளுக்கு பழக்கப்படுத்தப்பட்ட இந்திய மீனவர்களை வேறு தொழில்களில் ஈடுபடுத்த இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எதிர்காலத்தில் சமுத்திரவியல் ரோந்துச் சேவையை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம் 6ம் திகதி இடம்பெறும். இன்றைய பேச்சுவார்த்தையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் கடற்றொழில் அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றார்கள்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி