Sri Lanka Brodcasting Corporation

Sun12172017

Last updateSun, 17 Dec 2017 8am

வணிக

அரசாங்கம் வழங்கும் நிவாரண பொதிகளை கிராம மக்களுக்கும் வழங்க திட்டம்

 

அரசாங்கம்வழங்கும்நிவாரணப்பொதிகளைகிராமமக்களுக்கும்வழங்குவதற்கானவிசேடவேலைத்திட்டம்நடைமுறைப்படுத்தப்படும்எனபிரதமர்ரணில்விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார். நிவித்திகலபுதியபஸ்தரிப்பிடத்தையும்அதனையண்டியுள்ளவாராந்தசந்தையையும்நேற்றுதிறந்துவைத்ததன்பின்னர்அவர்இதனைக்குறிப்பிட்டார்.

அமைச்சர்திருமதிதலத்தாஅத்துக்கொறளவின்கோரிக்கைக்குஅமையதேசியகொள்கைகள்மற்றும்பொருளாதாரஅலுவல்கள்அமைச்சுஇந்தத்திட்டங்களுக்காக 12 கோடிநிதியைவழங்கியிருந்தது

சுமார் 45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காப்பீட்டு வசதிகளை வழங்கும் சுரக்ஷா காப்புறுதித் தினம் இன்றாகும்.

தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. தேசத்தின் பிள்ளைகளை என்றும் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. தேசிய நிகழ்ச்சி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நுகேகொட அனுலா வித்தியாலயத்தில் இடம்பெறும். சுரக்ஷா காப்புறுதித் திட்டம் பற்றி பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், பாடசாலை சமூகத்திற்கு மத்தியிலும் விளக்கம் அளிக்க இன்று தொடக்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 45 லட்சம் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சுரக்ஷா காப்புறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை கல்வி அமைச்சும், காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து அமுலாக்குகின்றன. இதன் மூலம் மாணவர் ஒருவர் வருடம் ஒன்றிற்கு ஆகக் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான காப்பீட்டு வசதிகளை பெறுகிறார்.

சுற்றுலா தொழில் துறையை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம்

 

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக விசேட வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக பல திட்டங்களுக்கான முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன. 2020ஆம் ஆண்டளவில் 45 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

Read more...

கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

தேங்காயின் கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடுதலாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெங்கு பயிர்ச் செய்கை அபிவிருத்தி சபையின் தலைவர் கபில யகந்தாவெல தெரிவித்துள்ளார்.

தற்சமயம் தேங்காய்க்கான சந்தை சில்லறை விலை 75 ரூபாவாகும். இந்த விலையிலும் பார்க்க அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை தமக்கு அறிவிக்கலாம் என்று திரு யகந்தாவெல பொதுமக்களை கேட்டுள்ளார். வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், தேங்காயின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தேங்காயின் விலை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் குறைவடையும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேங்காயின் விலை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் குறைவடையும் என்று தெங்கு செய்கை சபையின் தலைவர் கபில யகந்தலாவ தெரிவித்துள்ளார். நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 30 ஆம் திகதி வரை தேங்காய் அறுடை கிடைக்கிறது. இதற்கு 28 கோடி தேங்காய் அறுவடையாக எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். மக்களின் தேங்காய் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடமாடும் சேவையும் அமுலாகிறது.

லங்கா சதோச நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் வழங்கி வருவதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவிப்பு.

லங்கா சதோச நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலன் கருதி அத்தியாசியப் பொருட்களை தொடர்ந்து வலுகை விலையில் வழங்கி வருவதாக நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ரி.கே.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் உள்ள சதேசா கிளைகளின் எண்ணிக்கை இவ்வருட இறுதிக்குள் 400 வரை அதிகரிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கருத்து வெளியிட்டார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவையான பொருட்களை குறைவின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் ஏற்படட காலநிலை மாற்றத்தினால் தொடர்ந்தும் மூன்றும் போகங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால், பொருட்களுக்கான கேள்விக்கு ஏற்றவாறு விநியோகம் இடம்பெறவில்லை. பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு இதுவே பிரதான காரணமாக அமைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலையை நிர்ணயிப்பதற்கு ஒரு புதிய விலை சூத்திரம்.

 

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்கான புதிய விலை சூத்திரம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டளவில் நாட்டின் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை

Read more...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

வுhழ்க்கைச் செலவினத்தை குறைக்கும் நோக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைக்கப்படும் என்று சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கு சதொசவில் விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார். அரிசியை இறக்குமதி செய்வதற்காக திறைசேரியின் செயலாளர் தலைமையிலான கேள்விப்பத்திர குழவொன்றை நியமிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாதத்தில் மேலும் 30 சதொச கிளைகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நியாயமான விலையில் அரிசி விற்பளை செய்யப்படாத பட்டசத்தில் அரிசிக்கு கட்டுப்பாட்டு அறிவிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவிப்பு

தொகை மற்றும் சில்லறை சங்கம் நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யாத பட்சத்தில் அடுத்த வாரத்தில் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும். இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more...

லிற்றோ காஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிஷ்ஷங்க நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

 

லிற்றோ காஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிஷ்ஷங்க நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக்க அமரசூரிய இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். நிதி மோசடி மற்றும் நிதித் தூய்மையாக்கல்

Read more...

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி