Sri Lanka Brodcasting Corporation

Wed09202017

Last updateWed, 20 Sep 2017 7pm

வணிக

பொலித்தீன் பாவனைக்கான தடை இன்று அமுலுக்கு வருகிறது.

 

பொலித்தீனுக்கு பதிலாக சுற்றாடல் நேய மாற்று வழிகள் நோக்கி மக்களை திருப்பும் முயற்சிகள் நாட்டுக்குள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் அடிப்படையில், பொலித்தீன் பைகள், சொப்பிங் பேக், மதிய உணவு பொலித்தீன் விரிப்புக்கள் மற்றும் பொலிஸ்டரின் பெட்டிகளின் பாவனையும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு

Read more...

பொலித்தீனுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்கள் சந்தையில்.

                 

பொலித்தீனுடன் தொடர்புபட்ட தயாரிப்பின் பாவனை மற்றும் விற்பனை அடுத்த மாதம் 1ம் திகதியின்பின்னர் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுபொலித்தீனுக்குப் பதிலாக தற்போது மாற்றுப் பொருட்கள்சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளனஇந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள்ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்உபாலி குணரத்ன தெரிவித்துள்ளார்.

உத்தேச வரிச் சட்டமூலத்தின் ஊடாக பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு.

 

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது மக்களின் பொறுப்பாகும் என வயம்ப பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஆமிந்த மெத்சில தெரிவித்துள்ளார். அரசாங்கம் புதிதாகக் கொண்டுவரும் வரி சட்டமூலத்தின் ஊடாக நாட்டில் வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய வரி சட்டமூலத்தின் ஊடாக வரிகளை தளர்த்த

Read more...

எதிர்காலத்தில் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பல முதலீடுகள்.

 

எதிர்காலத்தில் இலங்கைக்கு சர்வதேச மட்டத்திலான பல முதலீடுகளை எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ தெரிவித்துள்ளார். இது நாட்டின் எதிர்கால நடவடிக்கைக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா, சீனா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு மேலதிகமாக ஆபிரிக்கா, அமெரிக்கா  போன்ற நாடுகளிடமிருந்தும் முதலீடுகள் பெற்றுக் கொள்ளப்பட உள்ளன. உலகின் அனைத்து நாடுகளுடனும் பொதுவான கொள்கையின் கீழ் தற்போதைய அரசாங்கம் தொடர்பைப் பேணி வருகிறது. குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். 

குப்பைகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பம்;.

 

இலங்கையில் முதல் தடவையாக குப்பைகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read more...

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் இலாபம் அதிகரித்துள்ளது – ஊழியர்களின் சம்பளம் 70 சதவீதமாக அதிகரிப்பு.

அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் வருடாந்தம் இரண்டு பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டுவதாக அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதனால், ஊழியர்களின் கொடுப்பனவை 70 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமைச்சர் கூறினார். பிலியந்தலை நகரில் அரச ஒசுசலவை திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

இலங்கையின் மிகப் பெரிய மருந்து விற்பனை நிறுவனமாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் திகழ்கிறது. கடந்த காலங்களில் மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டதை மக்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். நல்லாட்சி அரசாங்கத்தின் இலவச சுகாதார சேவை சரியான முறையில் கிடைத்தது. ஸ்டேன்ஸ் எனப்படும் இருதய வால்வு, கண் வில்லை என்பன இலவசமான முறையில் வழங்கப்படுகின்றன. தமக்கு எதிராக செயற்படும் சங்கங்களுக்கு உற்பத்தி நிறுவனங்கள் பணம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வளர்ச்சி.

இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் கொழும்பு பங்குச் சந்தை பாரிய வளர்ச்சியைக் காட்டியுள்ளது. மொத்த பங்குகளின் விலைச்சுட்டெண் 8 தசம் இரண்டு மூன்று பெறுமானத்திற்கு உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் சில மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வெளிநாட்டு கொள்வனவுகள் இரண்டு மடங்கால் அதிகரித்துள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது வெளிநாட்டு நிதியின் பாய்ச்சல் 383 தசம் 5 மில்லியன் ரூபாவினால் வளர்ச்சி கண்டு 23 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. கொழும்பு வியாபார பொருட்கள் பரிமாற்றத்திலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் ஏற்பட்ட பின்னடைவுடன் ஒப்பிடும் போது இது பாரிய வளர்ச்சியாகும் என கொழும்பு பங்குச்சந்தை அறிக்கை தெரிவிக்கின்றது.

எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதியில் மிளகு அறுவடை கொள்வனவு செய்யப்படும் என்று அரசாங்கம் உறுதி.

 

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் மிளகு அறுவடையை முற்றாக கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். இதனால் உண்மைக்கு புறம்பான பிரசசாரங்களில்; ஏமாந்து விடாமல், மிளகு அறுவடையை தம்வசம் வைத்திருக்குமாறு அமைச்சர் இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சந்தை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு உற்பத்தியாளர்களிடம் நேரடியாக மிளவை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் வேலைத் திட்டத்தை வகுத்திருப்பதாக அமைச்சர் எமது நிலையத்திற்கு தெரிவித்திருந்தார். உலக சந்தையில் மிளகின் விலை குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. இதனை பயன்படுத்தி சிலர் இலாபம் ஈட்ட முயற்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்து சவுதி அரேபியா பாராட்டு.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பற்றி சவூதி அரேபியாவின் இளவரசர் அல் வலீட்; பின் தலால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வர்த்தகம், சுற்றுலா ஆகிய துறைகளில் முதலீடுகள் மேற்கொள்வது பற்றி சவூதி அரேபியா கவனம் செலுத்தியிருப்பதாக அவர் கூறினார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

Read more...

சீனி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டாலும், சில்லறை விலை அதிகரிக்க மாட்டாதென நிதியமைச்சு கூறுகிறது.

சீனிக்கான இறக்குமதி வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டாலும், அதற்கேற்றவாறு சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க மாட்டாதென சீனி இறக்குமதியாளர் சங்கம் நுகர்வோர் சேவைகள் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் சந்தையில் சீனியின் சில்லறை விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Read more...

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி