செய்தி

நாட்டில் முதலீடு செய்வது தொடர்பில் பல நிறுவனங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன

அதிகளவிலான முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை என்பனவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது. உலக நாடுகளுக்கு மத்தியில் இலங்கையை அபகீர்த்திக்கு உள்ளாக்க வேண்டாம் என அவர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் கோரிக்கை விடுத்தார். ராஜித சேனாரட்ன நாட்டை காட்டிக்கொடுத்து அரசியல் ரீதியான நிந்தனைக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.