செய்தி

சில ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தாலும், இதன் மூலம் ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லை என்று பிரதிப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்களத்துடன் இணைந்த சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தாலும், இதன் மூலம் ரயில் போக்குவரத்திற்கு பாரியளவிலான பாதிப்புக்கள் இல்லை என்று பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார். நாளைய தினத்தில் 300 தடவைகள் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.