Sri Lanka Brodcasting Corporation

Fri04272018

Last updateThu, 26 Apr 2018 9am

செய்தி

பிணை நிபந்தனைகளை நிறைவேற்றியதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுதலை.

பிணைக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றி பிணையில் கைச்சாத்திட்டதன் பின்னர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். இவரின் கடவுச்சீட்டு தற்போது மேல் நீதிமன்றத்தில் உள்ள அதேவேளை, இதனை உறுதிப்படுத்தாததால் அவரால் பிணை நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல் போனது. எனவே, நேற்று அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை மெஜிஸ்ட்ரேட் நீதவான் உத்தரவிட்டார். விளையாட்டுத்துறை அமைச்சின் மூன்று கோடி 90 லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்றவிசாரணை பிரிவினால் இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி