Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

செய்தி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிப்பு.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை நேற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, 122 பேர் எதிராகவும், 76 பேர் ஆதரவாகவும் வாக்களித்தார்கள். வாக்களிப்பு நடந்த சமயம் 26 பேர் சபையில் இருக்கவில்லை.

இந்தப் பிரேரணையை தோற்கடிக்க உதவிய சகலருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மக்கள் உணரக்கூடிய வகையிலான அபிவிருத்தி முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என பிரதமர் குறிப்பிட்டார். அவர் நேற்றிரவு பாராளுமன்ற கமிட்டி அறையில் தமக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளின் அங்கத்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை தனிநபரை பாதுகாக்கும் முயற்சியாக கருதி எதிர்கொள்ளவில்லை. மாறாக அரசாங்கத்தையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் எதிர்கொண்டதாக திரு ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய குழுக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தாம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி