Sri Lanka Brodcasting Corporation

Sun09242017

Last updateFri, 22 Sep 2017 8pm

 

செய்தி

உள்நாட்டு வருமான சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி அமுலுக்கு வருகிறது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு வருமான சட்டம் அடுத்த ஆண்டு முதலாம் திகதி தொடக்கம் முழுமையாக அமுலுக்கு வருமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் மீதான வரி, மூலதன வரி போன்றவற்றை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் அறவிட்டு, வருமான வரியை ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் அமுலாக்குவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எழக்கூடிய நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொண்டு, வருமான வரிச்சட்டத்தின் சகல வரி அறவீடுகளையும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசகைக்கு அமைய இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.


காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கைச்சாத்திட்டமை பற்றி பல தரப்புக்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில், இந்த அலுவலகத்தை விரைவில் ஸ்தாபிக்குமாறு மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஸையத் ராத் ஹூசைன் கூறியிருந்தார். இதனை விரைவில் ஸ்தாபிக்குமாறு கோரி காணாமல் போனவர்களின் குடும்ப சங்கம் முதலான அமைப்புக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தன. இந்த நிலையில் அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படுவது சிறப்பானதென காணாமல் போனவர்களது குடும்பங்கள் அங்கம் வகிக்கும் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி