Sri Lanka Brodcasting Corporation

Wed08232017

Last updateTue, 22 Aug 2017 6pm

 

செய்தி

காலஞ்சென்ற அமரபுர நிக்காயாவின் மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய தவுல்தென ஞானீஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

அமரபுர பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் அமரர் அதிசங்கைக்குரிய தவுல்;தென ஞானீஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும்.

இந்த மதகுருவின் திருவுடல் நுகேகொட பாகொட ஸ்ரீ வித்தியா விஜயாராம விஹாரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவர் பௌத்தபீடத்திற்கு ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் இன்று அரச நிறுவனங்களிலும், வீடுகளிலும் மஞ்சள் நிறக் கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் ஒரு மணி முதல் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதால் பல்வேறு வீதிகளின் போக்குவரத்து வரையறுக்கப்படவுள்ளது. சுதந்திர சுற்றுவட்டம், இலங்கை மன்றக் கல்லூரி வீதி என்பனவற்றின் ஊடாக சுதந்திர மாவத்தைக்கான போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும். பிற்பகல் 2.30 இன் பின்னர் சுதந்திர மாவத்தை முற்றாக மூடப்பட இருக்கின்றது. சுதந்திர மாவத்தை, சுதந்திர சதுக்கம் என்பனவற்றுக்கான சகல வீதிகள் மூடப்பட இருக்கின்றன. கலாஞ்சென்ற மகாநாயக்கரின் பூதவுடல் தாங்கிய வாகனத் தொடரணி நுகேகொடையில் இருந்து பாகொட வீதி, பிட்டக்கோட்டே சந்தி, எத்துக்கோட்டை சந்தி, பாராளுமன்ற வீதி, ஆயுள்வேத சந்தி, பாடசாலை வீதி, டீ.எஸ்.சேனாநாயக்க சந்தி, ஹோட்டன் பிரதேசம், தாமரைத்தடாகத் சுற்று வட்டாரம், சுதந்திர சுற்றுவட்டம் ஊடாக சுதந்திர சதுக்கத்தை சென்றடையும்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி