Sri Lanka Brodcasting Corporation

Sun05282017

Last updateFri, 26 May 2017 8pm

 

செய்தி

கிராமோதய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கஜ-சமர-கம கிராமம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும்.

தென்னிலங்கையில் கிராமோதய திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கஜ-சமர-கம கிராமத்தை பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இன்று மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கிறார்.

இந்தக் கிராமம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹர பிரதேச செயலாளர் பிரிவில் சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டது. இதில் 70 வீடுகள் அமைந்துள்ளன. வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அரச நிதியை பெற்று கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்திருந்தது.

வீடமைப்புக்கு பொறுப்பான அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் 50ஆவது பிறந்த தினம் இன்றாகும். அத்துடன், சர்வதேச வீடமைப்பு ஆண்டின் 30ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் வகையில், கஜ-சமர-கம கிராமம் மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப்படுகிறது. இன்று ஞாபகார்த்த முத்திரையும் வெளியிடப்படும். இவ்வாண்டு 500 கிராமோதய கிராமங்களை மக்கள் பாவனைக்கு ஒப்படைப்பது அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறினார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி