Sat03282020

Last updateMon, 24 Feb 2020 8pm

Latest News

அரசசேவையில் மோசடி மற்றும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கு தேசிய கணக்காய்வுச் சட்டம் வழிவகுப்பதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசிய கணக்காய்வு சட்டத்தின்; மூலம் அரச சேவையில் இடம்பெறும் மோசடி மற்றும் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்று புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். இந்த சட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரச நிதி முறையற்ற விதத்தில் பன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்துவதற்கு இவ்வாறான சட்டம் தேவை என்று பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியிருந்த போதிலும், நிர்வாகத்தில் இருந்த அரசாங்கங்கள் சட்டத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இருப்பினும் நல்லாட்சி அரசாங்கம் தேர்தலின்போது உறுதிமொழிக்க அமைவாக இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த கருத்தை கட்சியென்ற ரீதியில் நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த கருத்தை கட்சியென்ற ரீதியில் நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தக் கருத்து பற்றிய வாதப் பிரதிவாதங்களால் பாராளுமன்றத்pல் அமளிதுமளி ஏற்பட்டது. இதன் காரணமாக, பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை பின்போடப்பட்டது.

உயர்தரத்திலான திரைப்பட நூல்களும், நாடகங்;களும் அறிமுகம் செய்வதற்கான முறையான வேலைத்திட்டம் அவசியம் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

கலைரசனையை மேம்படுத்துவதற்காக தரம் வாய்ந்த திரைப்படப் புத்தகங்களும், தொலைக்காட்சி நாடகங்களையும், புத்தகங்களையும் அறிமுகம் செய்வதற்கான நடைமுறைகள் அறிமுகபடுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலைஞர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார். திரைப்படம், நாடகம் ஆகிய துறைகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளினால், இந்த துறையுடன் தொடர்புபட்டவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கொழும்புக்கு வெளியே உரிய தரத்துடன் கூடிய திரையரங்குகள் இல்லாமையும் திரைப்படத்துறைக்கான பாதிப்பாகும் என்றும் கலைஞர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டினார்கள்.

ஹிட்லரைப் போன்ற ஆட்சியாளர் நாட்டுக்கு அவசியமில்லை என்று கலைஞ்ர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

மிலேச்சத்தனத்தை தோற்கடித்து முன்னோக்கிச் செல்லும் சமூகத்திற்கு ஹிட்லரைப் போன்ற ஆட்சியாளர்கள் அவசியமில்லை என்று கலைஞர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஹிட்லரைப் போன்ற ஆட்சியாளர்களை எதிர்பார்ப்பது ஆபத்தான நிலையாகும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலின்போது மஹித்த ராஜபக்ஷவுக்கு சீனாவிடம் இருந்து பணம் கிடைத்தமை பற்றி விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்று ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நியூயோர்;க் ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி பற்றி அரசாங்கம் துரிதமாக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.

மாகாணசபைத் தேர்தலை உரிய காலப்பகுதியில் நடத்துமாறு அவர் அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

மிக் விமான கொடுக்கல் வாங்கல் பற்றி ஐந்து இராணுவ அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்ற அனுமதி

மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் பற்றி இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகளின் கணக்குகளை பரிசோதிப்பதற்கு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்தன சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட கமாண்டர் உட்பட ஐந்;து அதிகாரிகளின் 40 வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களை பொலிஸ் நிதி விசாரணைப் பிரிவுக்க வழங்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கான பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.


எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர், எல்லை நிர்ணய ஆணைக்குழவின் தலைவர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் கலந்துரையாடலில்; பங்கேற்றார்கள். தேர்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாகாணசபைத் தேர்தலை பழைய மற்றும் புதிய முறைகளின் கீழ் நடத்துவது பற்றியும், எல்லை நிர்ணயம் தொடர்பாகவும், இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் கூறினார்.

பாடசாலை அதிபர் ஒருவருக்கு அநீதியான முறையில் இடமாற்றம் வழங்கிய வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் குற்றவாளியென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


2008ஆம் ஆண்டில் 11 பேர் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்;சியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விளக்குமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் புலனாய்வு சிப்பாய்களுக்கான விளக்க மறியல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி உட்பட மூன்று பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் ஒருவருக்கு அநீதியான முறையில் இடமாற்றம் வழங்கிய வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்;ன உரிய அதிபருக்கு இரண்டரை இலட்சம் ரூபா அபராதம் செலுத்த வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடுமையான ஆட்சி நாட்டு அவசியம் என்ற கூற்றின் மூலம் கடந்த கால ஆட்சியாளர்களின் சுயரூபம் தெளிவாகிறதென அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

மனித உரிமைகளை உறுதிப்படுத்தி கடனை செலுத்திய வண்ணம் நாட்டை முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்திற்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகம் சுதர்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார். கடுமையான ஆட்சி, நாட்டுக்கு அவசியம் என்ற கருத்தின் மூலம் கடந்த  ஆட்சியின் சுயரூபம் தெளிவாகிறதெனவும் அவர் கூறினார். இந்தக் காலப்பகுதியில் மனித உரிமைகள் மாத்திரமின்றி நிதி நிர்வாக கட்டமைப்புககளும் சீர்குலைந்ததாக சுதர்;சன குணவர்த்தன தெரிவித்தார்.

புதிய உள்நாட்டு வருமான சட்டத்தின் கீழ் வரி ஆலோசனை அறிக்கைகளை பெறலாம் என உள்நாட்டு வருமான வரி ஆணையாளர் நாயகம் அறிவிப்பு.

புதிய முதலீட்டையோ, தொழில் முயற்சியையோ தொடங்குகையில் உள்நாட்டு அரசிறை திணைக்களத்திற்கு 25 ஆயிரம் ரூபா செலுத்துவதன் மூலம் தீர்வைகள் பற்றிய ஆலோசனைகளை பெற முடியும் என உள்நாட்டு அரசிறை ஆணையாளர் நாயகம் ஐவன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை உலகம் முழுவதிலும் அமுலில் உள்ளது. இதற்கு முன்னர் இலங்கையில் தீர்வை ஆலோசனைகளை பெறுவதற்கு வெளித் தரப்பிற்கு இரண்டு லட்சம் ரூபாவிற்கு மேலான தொகையை செலுத்த வேண்டியிருந்தது. இந்தப் பிரச்சினைக்கு பரிகாரம் காணும் நோக்கில் புதிய உள்நாட்டு அரசிறை சட்டத்தின் கீழ் மாற்றங்களை மேற்கொண்டதாக திரு திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த நடைமுறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன சமீபத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரித்தார்.

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை மீதான பாராளுமன்ற விவாதத்திற்கு சபை முதல்வர் அனுமதி.

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை பற்றி ஆராய அடுத்த பாராளுமன்ற அமர்வில் விவாதமொன்றை பெற்றுத்தர சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல இணக்கம் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கையை ஏற்று, விவாதத்தை நடத்த சபை முதல்வர் இணங்கியிருக்கிறார்.

இதன் பிரகாரம், குறித்த விவாதத்தை எதிர்வரும் 18ஆம் திகதியோ, அதற்கு முன்னதாகவோ நடத்துவது பற்றி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்படும்.

நாட்டின் ஜனநாயக வரம்புகளுக்குள் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கூறுகிறார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் நடைமுறையை நாட்டின் சட்டவரம்பிற்கும், ஜனநாயக வரம்புகளுக்கும் உட்பட்டவாறு அரசாங்கம் முன்னெடுப்பதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடித்தல் என்பது, எவர் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால், துப்பாக்கியை கொண்டு சென்று அவரை சுட்டுக் கொல்வதல்ல. அதைத்தான் முன்னைய ஆட்சியாளர்கள் செய்தார்கள் என கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டார்.

சட்டவரம்புகளுக்கு உட்பட்டவாறு சந்தேகநபர்களுக்கு முறையாக வாய்ப்பளித்து, யார் குற்றவாளி என்பதை தீர்மானிப்பது அவசியம். தற்போது உரிய நடைமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன. பலர் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இந்த நடைமுறைகள் சரியாக பூர்த்தியடைய கால அவகாசம் தேவை என அவர் மேலும் கூறினார்.

யுனெஸ்கோவில் தஞ்சாவூர் ஆலயம் பற்றிய தமிழ் படைப்பை அரங்கேற்றி, வரலாறு படைக்கும் இந்திய நாட்டியத் தாரகை.

இந்தியாவின் முன்னணி பரதநாட்டியக் கலைஞரும், ஆராய்ச்சியாளருமான பாலாதேவி சந்திரசேகர் பரிஸ் நகரில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் தமது திறமைகளை வெளிக்காட்டி வரலாறு படைக்கவுள்ளார். இவரது பிந்திய படைப்பு நாளை யுனெஸ்கோ தலைமையகத்தில் அரங்கேறவுள்ளது. அருவத்திலிருந்து உருவத்தை நோக்கி : தேவரடியாளின் பார்வையில் பிரகதீஸ்வரர் என்ற தொனிப்பொருளில் அவரது நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய உலக மரபுரிமை ஸ்தலத்தை மையமாகக் கொண்ட தமிழ் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரில் ஜேர்மன் அதிர்ச்சி தோல்வி - சுற்றுத்தொடரிலிருந்தும் வெளியேற்றம்.

உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் நடப்புச் சம்பியனான ஜேர்மன் தென்கொரியாவின் முன்னிலையில் தோல்விகண்டு, சமகால சுற்றுத்தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் வரலாற்றை பொறுத்தவரையில் இது மிகப் பெரிய அதிர்ச்சியாகும் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய போட்டியில் தென்கொரிய வீரர்கள் ஜேர்மனியை இரண்டுக்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் தோற்கடித்தார்கள். சுவிட்சர்லாந்து, கொஸ்தாரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை போட்டிருந்தன. பிரேஸில் சேர்பியாவை இரண்டுக்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. மெக்ஸிக்கோவுக்கு எதிரான போட்டியில் சுவீடன் மூன்று கோல்களை போட்டு வெற்றியீட்டியது. இன்று முதற் சுற்றுக்குரிய நான்கு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் அமைந்துள்ள வெஹர விஹாரைகளில் நாளை பல்வேறு மத அனுஷ்டானங்கள் இடம்பெறவிருக்கின்றன.

பொசொன் போயா தினத்தன்று பத்து லட்சம் அடியார்கள் அனுராதபுரம் புனிதப் பிரதேசத்திற்கு செல்வார்கள் என அனுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அடியார்களுக்குத் தேவையான சகல வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 200க்கும் அதிகமான தான நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை, இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று காலை மூன்று ரயில்கள் கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளன. நாளைய தினத்திலும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக ஒப்பந்தம் பற்றி மஹா சங்கத்தினருக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

இலங்கைக்கும், சிங்கப்பூருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் பற்றி விளக்கம் அளிக்கும் கடிதத்தை அமைச்சர் மலிக் சமரவிக்ரம மஹா சங்கத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த ஒப்பந்தம் பற்றி கூட்டு எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

ஒப்பந்தத்திற்கு சட்ட மாஅதிபரின் மேற்பார்வை அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து இறுதிச் சட்டமூலம் ஜனவரி மாதம் 14ஆம் திகதி அமைச்சரின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது. இலங்கைக்கு வர்த்தகக் கொள்கை கிடையாதென தவறான கருத்து பரவுகிறது. 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரத்தோடு புதிய வர்த்தக் கொள்கை நிறைவேற்றப்பட்டது. அரச நிறுவனங்கள், கைத்தொழில் சங்கங்கள் உட்பட சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடைய சகல துறைகளினதும் கருத்துக்கள் இதற்காக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

பிரகீத் எக்னெலிகொட எல்ரிரிஈ அமைப்பினருடன் தொடர்பு வைத்திருந்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவரது மனைவி நிராகரித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட எல்ரிரிஈ அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களின் மூலம் தமக்கு எதிராக சேறு பூசும் முயற்சிகள் இடம்பெற்றதாகவும், அதுபற்றி தாம் கவலை அடைவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவரது மனைவி கருத்து வெளியிட்டார்.

நுவரெலியாவில் சிறுத்தையொன்று உலாவுவதாக பிரதேசவாசிகள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.

நுவரெலியா கல்வேஸ்-லேன்ட் பிரதேசத்தில் சிறுத்தையொன்று நடமாடுவதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள். இந்த சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான போனியொன்றின் உடற்பாகங்களும் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிறுத்தையை பிடிப்பதற்கு வனஜீவராசிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

கிளிநொச்சியில், சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

கிளிநொச்சியில் அண்மையில் சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட காணொளிக் காட்சியை பரிசோதனை செய்து, இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் பிரிஸ்டவுணில் நடைபெறும் 3வது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் இன்று

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் பிரிஸ்டவுணில் நடைபெறும் 3வது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும். நேற்றைய தினம் ஆட்டம் நிறைவடைந்த வேளையில் தனது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சுரங்க லக்மால் மற்றும் கசுன் ரஜித தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினார்கள்.

பாலஸ்தீன அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்; - டிரம்பின் ஆலோசகர் பேட்டி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜாரெட் குஷ்னெர் பலஸ்தீனத்துடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் பலஸ்தீன நாட்டிலிருந்து வெளியாகும் 'அல் குட்ஸ்' என்ற செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீன அதிபர் அப்பாஸ் விரும்பினால் அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேட்டி அரபு மொழியில் வெளியாகி உள்ளது. ஒளிமயமான எதிர்காலம் அமைய நீங்கள் தகுதியானவர். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆகிய இரு நாட்டு மக்களும் தங்களது தலைமையை வலிமைப்படுத்தும் நேரமிது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு தீர்வை நோக்கிய விடயத்தில் கவனம் செலுத்துவதற்கு பொருத்தமான நேரம் இது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருகமனான் ஜாரெட் குஷ்னெர்  தெரிவித்துள்ளார்.