Mon04062020

Last updateMon, 24 Feb 2020 8pm

Latest News

பத்தரமுல்லை தியத்த உயனவில் நடைபெறும் நோன்மதி வலயத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

தியத்த உயன முன்றலில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மிஹிந்தலாவய்

Read more...

இலங்கையின் மீது ஐரோப்பா விதித்திருந்த மீன்பிடி தடை நீக்கம்

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது விதித்த மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் தடை உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் நீக்கப்பட்டதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்தார்.

தடையை நீக்குவது குறித்து சமீபத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தேசிய

Read more...

அமரர் சோமவங்ச அமரசிங்க உயிருள்ள வரை தமது அரசியல் கொள்கைகளுக்காக வாழ்ந்த அரசியல்வாதியென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதி அமரர் சோமவங்ச அமரசிங்கவின் குணநலன்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.

Read more...

தீயணைப்புப் படை வீரர்களின் சேவைகள் பாராட்டப்பட்டுள்ளன.

 தமது உயிரை துச்சமென மதித்து கடமைகளை நிறைவேற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்கு முழுத் தேசத்தினதும் கௌரவம் உரித்தாகிறதென மேல்மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய தெரிவித்தார்.

Read more...

இலங்கை அணியின் அயர்லாந்து சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்:

டப்ளினில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அயர்லாந்து வீரர்கள் 304 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறார்கள்.

இந்த வீரர்கள் சற்று நேரத்திற்கு முன்னர் 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்களை எடுத்திருந்தார்கள். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய

Read more...

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கான நிவாரணம் நீக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்தாலும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள்

மானியம் நீக்கப்பட மாட்டாதென அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். உராய்வு நீக்கும் எண்ணெய் தொழிற்சாலையை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. ஒரு வருடத்திற்குள் நிர்மாணப் பணிகளை

Read more...

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

 ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள்

வழங்கப்படவிருக்கின்றன. எதிர்வரும் 23ஆம் திகதி கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலங்கையின் அரசியல் கட்சி வரலாற்றில் கட்சி அங்கத்தவர்களுக்கு ஆள் அடையாள அட்டை வழங்கப்படும்

Read more...

பேதங்களை மறந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

வெளிநாட்டுக் கடன்களில் நாடு சிக்கியுள்ள சவாலான இந்த வேளையில் சகல பேதங்களையும் மறந்து தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கான

Read more...

தாதி உத்தியோகத்தர்களுக்கு பட்டம் வழங்குவதற்காக பிரத்தியேகபீடம் உருவாக்கப்படும்.

தாதிப் பட்டம் வழங்கும் பீடமொன்றை ஆரம்பிக்கப் போவதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Read more...

மீண்டும் அணியில் இடம்பெறுவது முதன்மை காரியமென தடை நீக்கப்பட்ட குசல் பெரேரா கூறுகிறார்.

தாம் அணியில் இணைந்து கொள்வது முதன்மையான விடயம் என இலங்கையின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.

Read more...

கனவு காண்கையில் மூளை குழப்பப்படுமானால் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒருவர் நித்திரை கொள்ளும் சமயத்தில் அவரது மூளையின் செயற்பாடு குழம்புமாயின் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாகநித்திரையில் கண் வேகமாக அசையும் கட்டத்தில் மூளைச் செயற்பாடுகள் பாதிக்கப்படுமானால்அன்றைய தினத்தில் கற்றுக்கொண்ட விடயங்கள் ஞாபகத்தில் இருப்பதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கனவு காண்கையில் கண்கள் வேகமாக அசைவது வழக்கம். எலிகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த விடயம் ஊர்ஜிதமானதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பரிசோதனையின் விபரங்கள் சயன்ஸ் என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

அடை மழை காரணமாக நீர்தேக்கங்கள் பலவற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதென நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடை மழை காரணமாக நீர்தேக்கங்கள் பலவற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதென நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை காரணமாக தெதுரு-ஓய நீர்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன என்று நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.

தெதுரு-ஓய ஆற்றுக்கு அருகிலுள்ள தாழ் நிலப்பகுதிகளான வாரியபொல,

Read more...

ஜனாதிபதி இன்று பிற்பகல் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன லண்டனில் அமைந்துள்ள லன்ஸெஸ்டர் ஹவுஸில் இடம்பெறும்மாநாட்டில் உரையாற்றவுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையில் இன்று பிற்பகல் 2.30ற்கு மாநாடு ஆரம்பமாகும். ஊழல் மோசடிகளை தடுக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி உலக நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினரை பிரித்தானிய மகாராணியாரின் விசேட பிரதிநிதி லெப்டினன்ட் புறூஸ் ஹோல்டர், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சின் விசேட பிரதிநிதி கெத்ரின் கொல்வின் ஆகியோர் நேற்று ஹீத்ரோ விமான நிலையத்தில் வரவேற்றார்கள். 

ஜனாதிபதி இன்று பிற்பகல் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன லண்டனில் அமைந்துள்ள லன்ஸெஸ்டர் ஹவுஸில் இடம்பெறும்மாநாட்டில் உரையாற்றவுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையில் இன்று பிற்பகல் 2.30ற்கு மாநாடு ஆரம்பமாகும். ஊழல் மோசடிகளை தடுக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி உலக நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினரை பிரித்தானிய மகாராணியாரின் விசேட பிரதிநிதி லெப்டினன்ட் புறூஸ் ஹோல்டர், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சின் விசேட பிரதிநிதி கெத்ரின் கொல்வின் ஆகியோர் நேற்று ஹீத்ரோ விமான நிலையத்தில் வரவேற்றார்கள். 

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச் சூழலை அசுத்தமாகப் பேணுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை.

நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச் சூழலை அசுத்தமாக வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பைசர் முஸ்தபா அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

Read more...

ரயில் வண்டிகளில் ரிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீதான அபராதத்தை அதிகரிக்கும் ஏற்பாடுகள்.

ரயில் வண்டிகளில் ரிக்கெட் இன்றி பயணிப்பவர்கள் மீதான அபராதத் தொகையை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு தயாராகிறது.

Read more...

ஜனாதிபதி சமூகநல சேவைத்திட்ட நடவடிக்கைகள் பலாங்கொட கொட்டவேஹெர மன்கட ஜனாதிபதி கல்லூரியில் நாளை நடைபெறும்.

ஜனாதிபதி சமூகநல சேவைத்திட்ட நடவடிக்கைகள் பலாங்கொட கொட்டவேஹெர மன்கட ஜனாதிபதி கல்லூரியில் நாளை நடைபெறும். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் மருத்துவ சேவைப்பிரிவு இதனை ஒழுங்கு செய்துள்ளது.

Read more...