Sat05302020

Last updateMon, 24 Feb 2020 8pm

Latest News

43 கோடி ரூபா செலவில் பொலநறுவையில் நீர்வாழ் உயிரின உற்பத்தி மத்திய நிலையம்

 

பொலநறுவை செவனபிற்றிய பிரதேசத்தில் புதிய நீர்வாழ் உயிரின உற்பத்தி மத்திய நிலையமொன்று அமைக்கப்படும். 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள இந்த மத்திய நிலையத்திற்காக அரசாங்கம் ஒரு கோடி 43 லட்சம் ரூபாவைச் செலவிடவுள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு ஒரு கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படும். பொலநறுவை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கும் இதில் இருந்து மீன் குஞ்சுகள் விடப்படும். இதுதவிர அனுராதபுரம் மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு நன்னீர் மீன் வளர்ப்பிற்காகவும் மீன் குஞ்சுகள் வழங்கப்படும். இந்த நீர் வாழ் உயிரின உற்பத்தி மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நன்னீர் மீன் வளர்ப்புத் துறையின் மூலம் நாட்டு மக்களின் ;போஷாக்குத் தேவையையும்

Read more...

வற் வரி காரணமாக பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சிரமத்தை எதிர்வரும் வாரத்தில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமென்று ஜனாதிபதி தெரிவிப்பு.

வற் வரி காரணமாக பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சிரமத்தை நீக்குவதற்கு  எதிர்வரும் வாரத்தில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்காக 3 பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்வரும் 2 தினங்களில் பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வற் வரியில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வற் வரிக்கு உட்படாத பொருட்களுக்காக அந்த வரிக்கு உட்படுத்தியுள்ள வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வற் வரியை கூடுதலாக அறவிடும் நபர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.

Read more...

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்.

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கத் தீர்மானித்துள்ளார். இந்த நியமனம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Read more...

பங்களாதேஷ் உணவு விடுதியில் பணயக் கைதிகளாக இருந்த இலங்கையர் இருவரும் விடுவிப்பு.

பங்களாதேஷ் டாக்கவில் பேக்கரி ஒன்றில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷில் உள்ள பதில் இலங்கைத் தூதுவர் செசன் தாம்புகல தெரிவித்தார். இவர்கள் இருவரும் தற்போது பங்களாதேஷ் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


விளையாட்டுச் செய்தியில் :- நுவன் குலசேகர இங்கிலாந்தின் பிராந்திய ரி-ருவன்ரி சுற்றுத்தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

நெட்-வெஸ்ட் ரீ-ட்வென்ரி கிரிக்கட் சுற்றுத்தொடரை இலக்காக வைத்து, இங்கிலாந்தின் சசெக்ஸ் கழகம் நுவன் குலசேகரவுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த 33 வயதுடைய வீரர் கென்ட், மிடில்-செக்ஸ், கிளாமோர்கன் கழக அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சசெக்ஸ் அணிக்காக விளையாடுவார்.

உலகச் செய்தியில்: பிலிப்பீன்ஸின் ஜனாதிபதியாக ரொட்றிக்கோ டுடெர்த்தே இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ரொட்றிக்கோ டுடெர்த்தே பிலிப்பீன்ஸின் ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும், அடாவடித்தனமான நடவடிக்கைகளாலும் மக்கள் மத்தியில் பிரசித்தம் பெற்றவராக காணப்படுகிறார். சத்தியப் பிரமாண வைபவத்தில் உரையாற்றிய சமயம், குற்றச்செயல்கள், ஊழல், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றுக்கு எதிரான போராட்டம் சளைக்காது முன்னெடுத்துச் செல்லப்படுமென டுடெர்த்தே குறிப்பிட்டார். இதுவரை காலமும் ஜனாதிபதி பதவியை மணிலாவை சேர்ந்த உயர்குடி கனவான்கள் அலங்கரித்தார்கள். டுடெர்த்தே ஆயுத மோதல்கள் தீவிரம் பெற்ற மின்தானோ தீவிலிருந்து முதல் தடவையாக ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகிறார்.

நிறைவான தூக்கம் நீரிழிவைத் தடுக்கும் - ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள்

ஆகக்கூடுதலான அல்லது ஆகக்குறைவான தூக்கம் பெண்களில் அல்லாது ஆண்களில் நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகரிப்பதாக ஐரோப்பிய ஆராய்ச்சியொன்றில் தெரியவந்துள்ளது.

நெதர்லாந்தின் தலைநகரில் இயங்கும் வீயூ மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த பெம்கே ரட்டேர்ஸ் என்ற பெண்மணி ஆய்வை நடத்தியுள்ளார். இந்த ஆய்வு குளுக்கோஸூடன் தொடர்புடைய சுகாதாரத்திற்கு தூக்கம் எந்தளவு முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

Read more...

இலங்கைக்கு எதிரான 4ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்திற்கு வெற்றி

நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

Read more...

நிறைவான தூக்கம் நீரிழிவைத் தடுக்கும் - ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள்

ஆகக்கூடுதலான அல்லது ஆகக்குறைவான தூக்கம் பெண்களில் அல்லாது ஆண்களில் நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகரிப்பதாக ஐரோப்பிய ஆராய்ச்சியொன்றில் தெரியவந்துள்ளது.நெதர்லாந்தின் தலைநகரில் இயங்கும் வீயூ மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த பெம்கே ரட்டேர்ஸ் என்ற பெண்மணி ஆய்வை நடத்தியுள்ளார். இந்த ஆய்வு குளுக்கோஸூடன் தொடர்புடைய சுகாதாரத்திற்கு தூக்கம் எந்தளவு முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

Read more...

விரைவில் மத்திய வங்கியின் புதிய ஆளுனர் - ஜனாதிபதி அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுனரின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஆளுனர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய தீர்வைகளால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் விரைவில் தீர்வைகளில் மாற்றங்களை மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். கிராந்துருக்கோட்டை மகளிர் விளையாட்டரங்கில் இடம்பெற்ற பதுளை மாவட்ட சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய வேலைத்திட்ட நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

Read more...

புதிய அரசியல் யாப்பு பற்றி சமூகத்தில் தவறான கருத்துக்களைப் பரப்பும் சதிமுயற்சி பற்றிய தகவல் அம்பலமாகியுள்ளது.

திட்டமிட்டு செயற்படும் குழுவொன்று புதிய அரசியல் யாப்பு குறித்து போலி பிரசாரங்களையும், எதிர்மறை கருத்துக்களையும் பரப்ப தொடங்கியிருப்பதாக பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

அரசியல் யாப்பு பிரேரணையோ, அது தொடர்பான வேறெந்த ஆவணமோ தயாரிக்கப்படவில்லை. இத்தகைய பின்னணியில், புதிய அரசியல் யாப்பின் சரத்துக்கள் பற்றி எதிர்வுகூறும் கருத்துக்கள் வெளியாவதாக பிரதமர் அலுவலகம் விடுத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சமகால அரசியல் யாப்பில் உள்ள பௌத்தம் தொடர்பான சரத்துக்கள் மாற்றப்படுமென கருத்துக்கள் வெளியாகின்றன. இவை முற்றிலும் உண்மைக்கு முரணானவை. தேரவாத பௌத்தத்தை பேணி பாதுகாத்து போஷித்;து வளர்க்கும் கடமையை அரசாங்கம் சரிவர நிறைவேற்றும்.

Read more...

மேலதிக கொடுப்பனவு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற வேலை பகிஷ்கரிப்பு காரணமாக குவிந்திருந்த கடிதங்கள் மற்றும் பொதிகளில் 90 சதவீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளன.

 

மேலதிக கொடுப்பனவை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வேலை பகிஷ்கரிப்பு காரணமாக குவிந்துள்ள கடிதங்கள் மற்றும் பொதிகளில்

Read more...

மக்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் ஜனாதிபதி.

 

 

             

கிடைக்கப் பெற்றுள்ள மக்களின் ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான

Read more...

ஜப்பானில் உள்ள முன்னணி 28 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை கண்டறிந்துள்ளனர்.

ஜப்பானில் உள்ள 28 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான விடயங்களைக் கண்டறிவதற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதன் முறையாக நேரடியாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

Read more...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தோனேஷிய மக்கள் நிதி நன்கொடை வழங்கியுள்ளார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக

Read more...

தேசிய வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வீடமைப்பு வேலைத்திட்டங்கள்.

தேசிய வீடமைப்பு தினம் எதிர்வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

Read more...

காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித்த தேரரின் 74ஆவது ஜனன தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது.

காலஞ்சென்ற சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் 74ஆவது ஜனன தின நிகழ்வு

Read more...

கொத்மலை மகாவலி மஹாசாய இன்று பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.

கொத்மலை மகாவலி மஹாசாய பகுதிக்கான பக்தர்களின் யாத்திரைக்காக இன்று மாலை

Read more...

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தினால் சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்யும் பணி நிறைவு.

கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட

Read more...

ஒரு லட்சம் மெற்றிக் தொன் நெல் விரைவில் சந்தைக்கு.

ஒரு லட்சம் மெற்றிக் தொன் நெல்லை விரைவாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு

Read more...