Thu05282020

Last updateMon, 24 Feb 2020 8pm

Latest News

மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அமைச்சர் சரத் அமுனுகம கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அமைச்சர் சரத் அமுனுகம கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். பொலன்னறுவை, அனுராதபுரம் மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துவைக்க அமைச்சர் அமுனுகம நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் அடிப்படையில், விவசாயிகளின் விளைச்சலுக்கு உத்தரவாத விலையில் பொருட்களை கீல்ஸ் மற்றும் கார்கில்ஸ் புட்சிற்றி நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை தொடர்பில் உள்ள சிக்கல்களையும் தீர்த்து வைக்க அமைச்சர் அமுனுகம தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட பேச்சுவார்;த்தை ஒன்று இடம்பெற்றது.

கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கம் பல வெற்றிகளை அடைந்திருப்பதாக பிரதி அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

நாட்டுக்காக பல்வேறு வெற்றிகளை கடந்த மூன்று ஆண்டுகளில் வென்றெடுக்க அரசாங்கத்தால் முடிந்ததாக பிரதி அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அவர் கருத்து வெளியிட்டார்.

அரசாங்கம் தற்சமயம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இதன் போது உள்நாட்டு கட்டுமாணத்துறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும். ஊடக சுதந்திரம் உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் உயிர் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தின் மீது ஏற்பட்டிருந்த அதிருப்தி காரணமாக நாட்டு மக்கள் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் பெரும்பாலான எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்ற அரசாங்கம் எதிர்ப்பார்த்திருந்தாலும், அதுபற்றி மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடையவில்லை என்று பிரதி அமைச்சர் ஜே.சி அலவத்துவல கூறினார்.

வட இந்தியாவில் சூறாவளி தாக்கத்தினால் குறைந்தது 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட இந்தியாவில் சூறாவளி தாக்கத்தினால் குறைந்தது 125 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் காற்று, மின்னல் மற்றும் தூசு படிந்த காற்றோட்டத்தினால் பல கிராமங்கள் சேதமடைந்துள்ளன. கட்டடங்களின் சுவர்கள் இடிந்து வீழ்ந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். 20 வருடங்களுக்குப் பின்னர் இடம்பெற்ற இந்தப் பாரிய அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களி;ன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று உத்தரப் பிரதேஷ் மாநிலத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்து;ளளார்.

தேசிய விமானச் சேவைகள் நிறுவனங்களின் அத்தியாவசிய ஆவணத் தகவல்களை ஜனாதிபதி விசாiணைக் குழு பெறுகிறது.

தேசிய விமானச் சேவைகள் நிறுவனங்களின் அத்தியாவசிய ஆவணங்களில் அடங்கியுள்ள தகவல்களை பெற்று விசாரணைகளை முன்னெடுப்பதென ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா, ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்கள் பேணிவரும் ஆவணங்களில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்த ஆவணங்கள் பெறப்படும். இந்த நிறுவனங்கள் மேற்கொண்ட வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய தகவல்களும் விசாரிக்கப்படவுள்ளன.

மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நீல் உனம்புவ தலைமையில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் குழுவொன்று தேசிய விமானச் சேவைகள் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை உன்னிப்பாக பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி மோசடிகள் பற்றி விசாரிக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு நீதித்துறை நிறுவனங்களை பணித்திருந்தது.

தேயிலை மற்றும் இறப்பர் செய்கைக்காக கிலைபோசெட் இரசாயனத்தை பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

தேயிலை, இறப்பர் செய்கைகளில் கிலைபொசெட் இரசாயனத்தை பயன்படுத்துவதன் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

நேற்று தொடக்கம் அமுலாகும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறப் போவதாக அமைச்சர் கூறினார். அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார்.

இறப்பர் தேயிலை உற்பத்தித் துறைகளுக்கு மாத்திரம் அமுலாகும் வகையில் கிலைபொசெட் களை நாசினிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த இரசாயனத்தின் மீதான தடையை நீக்கியதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இந்த இரசாயனம் மனித ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்க மாட்டாதென விஞ்ஞான பரிசோதனைகளில் ஊர்ஜிதம் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் சர்ச்சையில் சிக்கிய கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் மூடப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் சம்பந்தப்பட்ட தரவுப் பகிர்வு விவகாரத்தின் மையமாகத் திகழும் கேம்பிரிட்;ஜ் அனலிட்டிக்கா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் மூடப்படுகிறது. தமது அரசியல் வாடிக்கையாளர்களுக்கான ஃபேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாக பெற்றதாக கேம்பிரிட்ஜ் அனலிட்டடிக்கா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஒரு கேள்விக் கொத்தின் ஊடாக எட்டரைக் கோடிக்கு மேலான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திரட்டி, டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரசார நிறுவனத்திற்கு வழங்கியது என்பது இந்நிறுவனத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டாகும்.

தமது அணியை பாகிஸ்தான் மண்ணில் விளையாட அனுமதிப்பது பற்றி பரிசீலிக்கும் நியூசிலாந்து கிரிக்கட் சபை.

இவ்வாண்டின் கடைசிப் பகுதியில் பாகிஸ்தானில் விளையாடுமாறு அந்நாட்டு கிரிக்கட் சபை விடுத்த கோரிக்கையை நியூசிலாந்து கிரிக்கட் சபை பரிசீலித்து வருகிறது. எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நியூசிலாந்து அணி பங்கேற்கும் கிரி;க்கட் சுற்றுத்தொடரை பாகிஸ்தான் கிரிக்கட் சபை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏற்று நடத்தும். இந்த சுற்றுத்தொடர் மூன்று டெஸ்ட் போட்டிகளையும், மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளையும், மூன்று ரி-20 போட்டிகளையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது. 2002ஆம் ஆண்டுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி பாகிஸ்தானிய மண்ணில் ஒரு போட்டியிலேனும் விளையாடவில்லை. அந்த வருடத்தில் நியூசிலாந்து வீரர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தார்கள். வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்து 15 பேர் பலியானதால் நியூசிலாந்து வீரர்கள் உடனடியாக நாடு திரும்பினார்கள்.

இலங்கையின் திரையுலக ஜாம்பவான் அமரர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ரசிகர்களிடம் இருந்து நிரந்தரமாக பிரியாவிடை பெற்றுச் சென்றுள்ளார்.

மறைந்த திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்;டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் முழுமையான அரசாங்க அனுசரணையுடன் இ;டம்பெற்றன.

 

The president has stated in the final work that the domestic film industry has lost an era.

உள்நாட்டு திரைப்படத்துறை ஒரு சகாப்தத்தை இழந்துள்ளதாக இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க, பிரபல இந்திய இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

இங்கு இரங்கல் உரையாற்றிய ஜனாதிபதி, சிங்கள திரைப்படத்துறையில் தேசிய கலாசாரத்தையும், இலங்கையின் அடையாளத்தையும் சேர்த்த பெருமை அமரர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசை சாருமென்றார். அவர் உள்நாட்டு திரைப்படத்துறையை சர்வதேச அளவில் புகழ்பெறச் செய்தவர் எனவும் ஜனாதிபதி குறி;ப்பிட்டார்.

 

The Prime Minister has said that he will be able to restore Sinhala cinema from Indian harm to Dr. Lester James Peiris.

சிங்களச் சினிமாவை இந்திய பாதிப்பில் இருந்து மீட்டபெருமை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை சாருமென பிரதமர் கூறியுள்ளார்.

சிங்கள திரைப்படங்களை முற்று முழுதான இந்திய பாதிப்பில் இருந்து மீட்டெடுத்து அவற்றிற்கு தேசிய அடையாளத்தை தந்தவர் அமரர் லெஸ்ட்ர் ஜேம்ஸ் பீரிஸ் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாவல்களுக்கு திரைவடிவம் கொடுத்ததன் மூலம், அவர் இலக்கியத்திற்கும், திரைப்படத்துறைக்கும் ஆற்றிய சேவை அளப்பரியதென பிரதமர் கூறினார்.

தலைசிறந்த கல்விமான்களுள் ஒருவரும், திரைப்பட இயக்குனருமான கலாநிதி சுனில் ஆரியரட்ன உரையாற்றுகையில், அமரர் லெஸ்ட்ர் ஜேம்ஸ் பீரிஸ் வாழ்ந்த இல்லத்தை அரும்பொருள் காட்சியகமாக மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

 

புதிய ராஜாங்க அமைச்சர்கள் 8 பேரும், பிரதியமைச்சர்கள் 10 பேரும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

புதிய அமைச்சரவையின் மாற்றத்திற்கு அமைய, இன்று இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்கள். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாண வைபவம் இடம்பெற்றது.

பாலித்த ரங்கே பண்டார நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ, இடர்காப்பு முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராவார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக திலீப் வெதஆராச்சி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராவார்.

உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக மொஹான்லால் கிரேருவும், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக சம்பிக்கா பிரேமதாஸவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

விளையாட்டுத்;துறை மாகாண சபைகள் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சராக ஸ்ரீயானி விஜேவிக்ரம சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

புதிய மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க ஆவார்.

விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி; ஆற்றல் அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனெவிரட்ன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று ஜனாதிபதி முன்னிலையில் பிரதி அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.

கடற்றொழில் நீரியல்வள, கிராமிய அலுவல்கள் பிரதி அமைச்சராக அமீர் அலி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் துனேஷ் கங்கந்தவும், சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராக ரஞ்சன் ராமநாயக்கவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆற்றல் அபிவிருத்தி தொழிற்பயிற்சி மலைநாட்டு மரபுரிமைகள் பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான ஆவார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சாரதி துஷ்மந்தவும், நிலைபேறான அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சராக பாலித்த தேவரப்பெருமவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

மனுஷ நாணயக்கார தொலைத்தொடர்பாடல் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சராவார்.

உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதி அமைச்சராக முத்து சிவலிங்கமும், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் பிரதி அமைச்சராக அலிசாஹிர் மௌலானாவும், அரச தொழில்முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக எச்.எம்.எம்.ஹாரிஸூம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அரசியல் யாப்பின் மீதான 20 ஆவது திருத்தப் பிரேரணையை இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜேவிபி தயாராகிறது.

அரசியல் யாப்பின் மீதான 20 வது திருத்தப் பிரேரணையை இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மக்கள் விடுதலை முன்னணி தயாராகிறது.

இதனை தனி நபர் பிரேரணையாக சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜேவிபி அங்கத்தவர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் இன்று கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார்.

இது எந்த வகையிலும் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய யோசனைகளை கொண்டிருக்க மாட்டாது. ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமருக்கு மாற்றும் யோசனைகள் உள்ளடங்கியிருக்கும். சமகால ஜனாதிபதியின் பதவிக் காலம் பூர்த்தியான பின்னர் அமுலாகும் வகையில் திருத்த யோசனைகள் வரையப்பட்டுள்ளதாக திரு. விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

உள்ளுர் போட்டிகளில் விளையாடினால் மாத்திரமே லஸித் மாலிங்கவுக்கு தேசிய அணியில் வாய்ப்பு - ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவிப்பு.

இன்று ஆரம்பமாகும் உள்நாட்டு கிரிக்கட் சுற்றுத்தொடரில் லஸித் மாலிங்க விளையாடினால் மாத்திரமே அவர் இலங்கையின் ஒருநாள் சர்வதேச அணிக்கு தெரிவு செய்யப்படுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பின் தலைவர் திலங்க சுமத்திபால அறிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடரின் அணியொன்றுக்காக லஸித் மாலிங்கவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் இந்தியன் பிரிமியர் லீக் சுற்றுத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

தொழிலாளர் தினத்தன்று பிரான்ஸ் தலைநகரில் வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 பேர் கைது.

நேற்றைய தொழிலாளர் தினத்தன்று பிரான்ஸ் தலைநகரில் வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 பேரை பிரெஞ்சு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள், வீடுகள் போன்றவற்றை தீக்கிரையாக்கி, கண்ணாடிகளை உடைத்து தகர்த்ததாக அறிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி இமேனுவல் மெக்ரோன் அமுலாக்கியுள்ள தொழில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆட்சேபிப்பது அவர்களின் நோக்கமாக இருந்தது.

அமைச்சரவை மாற்றத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர்கள் எட்டு பேரும், பிரதி அமைச்சர்கள் பத்து பேரும் சத்தியப்பிரமாணம்.

புதிய அமைச்சரவையின் மாற்றத்திற்கு அமைய, இன்று இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்கள். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாண வைபவம் இடம்பெற்றது.

Read more...

இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மென்மேலும் வளர்ப்பது பற்றி ஆலோசனை

கடந்த ஆண்டு இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான ஒட்டுமொத்த வர்த்தகத்தின் பெறுமதி 460 கோடி டொலரை எட்டியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று சதவீத அதிகரிப்பு என அமைச்சர் கூறினார். இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன வர்த்தகத் தூதுக்குழுவுடனான கலந்துரையாடலில் அவர் புள்ளிவிபரங்களை அறிவித்தார்.

Read more...

தலைசிறந்த சிங்களத் திரைப்பட இயக்குநர் அமரர் லெஸ்ட்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் இன்று

சிங்களத் திரைப்படத்துறையின் தங்கக் குறியீடெனவும், தேசிய சினிமாவின் அகில அடையாளம் எனவும் வர்ணிக்கப்பட்ட பிரபல இயக்குநர் லெஸ்ட்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் இன்று பூரண அரச அனுசரணையுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும்.

அன்னாரது பூதவுடல் இன்று

Read more...

கியூபாவின் தரமுயர்ந்த மருந்து வகைகளை நேரடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை.

கியூபாவில் தயாரிக்கப்பட்ட தரமுயர்ந்த புற்றுநோய் மருந்து உள்ளிட்ட ஒளடதங்களை இறக்குமதி செய்ய நடவடிக்;கை எடுக்கப்படுகிறது. இதற்குரிய இராஜதந்திர உடன்படிக்கையில் விரைவில் கைச்சாத்திடவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். இதுவரை காலமும் இடைத் தரகர்கள் ஊடாக கியூபாவிலிருந்து மருந்து பொருட்கள் தருவிக்கப்பட்டன. எதிர்காலத்தில் கியூப அரசாங்கத்தின் ஊடாக நேரடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கண்டி கலவரங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேருக்கு 14ஆம் திகதி வரை விளக்கமறியல்.

கடந்த மார்ச் மாதம் கண்டி திகன பிரதேசத்தில் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சந்தேகநபர்களில் மஹசோன் பலக்காய என்ற அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவும் அடங்குகிறார்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடையும். விண்ணப்பப்படிவங்களை றறற.னழநநெவள.டம என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளமுடியும். எனவே, உரிய தினத்திலோ அதற்கு முன்னதாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த பாடசாலை அதிபர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய அமைச்சரவைக்குரிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து வருகின்றனர்

1. நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயங்களுக்கு உள்ளாகினார்கள். இவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகாமையில் தனியார் பஸ் ஒன்றின் பின்புற டையர்; வெடித்ததினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கதிர்காமத்திற்கு யாத்திரையில் ஈடுபட்டிருந்தோரே இதில் காயங்களுக்கு உள்ளானார்கள்.

அரச விசாக நோன்மதி மகோஹ்சவம் குருநாகல் பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விஹாரையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது

அரச வெசாக் மகோற்சவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் குருணாகல் மாவட்டத்தின் பிங்கிரிய தேவகிரி மஹா விகாரையில் இன்று மாலை இடம்பெறும்.

Read more...