Thu10242019

Last updateTue, 18 Jun 2019 3pm

Latest News

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சென்ரஸ் பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சென்ரஸ் பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். இவர் இம்மாத இறுதியில் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கின்றார். சாரா சென்ரஸை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வீராங்கனை என புகழாரம் சூட்டியிருக்கின்றார். மூன்றரை ஆண்டுகளாக இவர் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளராக பணியாற்றியிருக்கின்றார். ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றக் கிடைத்தமை தமக்குக் கிடைத்த கௌரவமாகும் என்று சாரா சென்ரஸ் அறிவித்திருக்கின்றார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை ஒரு மாத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபரிடம் கோரிக்கை.

நீதிமன்ற அவதூறு குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது முறைப்பாட்டுடன் தொடர்புடைய குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருக்கின்றது. 
 
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, மூர்து பெர்னாண்டோ ஆகிய மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றப் பத்திரத்தை ஒரு மாத்திற்குள் தாக்கல் செய்வது அவசியமாகும். பாராளுமன்றத்தை கடந்த நவம்பர் மாதத்தில் கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரித்த நீதிபதிகள் பற்றி ரஞ்சன் இராமநாயக்க வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  

தங்கிவாழும் மனோநிலையில் இருந்து மக்களை மீட்டெடுப்பது சமுர்த்தி வேலைத்திட்டத்தின் நோக்கம்

தங்கிவாழும் மனோநிலையிலிருந்து மக்களை விடுவிப்பது சமுர்த்தி வேலைத்திட்டத்தின் இலக்காகும் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். புதிதாக சிந்திப்போம் - வல்லமையுடன் எழுந்திருப்போம் என்ற வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. 
 
ஜனசவிய, சமுர்த்தி போன்ற நிவாரணங்களை அன்று முதல் இன்று வரை பெற்றுக் கொள்ளும் ஒரே தரப்பு இருந்து வருவதாகவும், இதனால் அவர்களை வலுவூட்ட முடியாத நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சில் அவர் கருத்து வெளியிட்டார். 
 
இவர்களை வழிநடத்தும் வேலைத்திட்டமும் காணப்படுகிறது. இதனைக் கருத்திற் கொண்டு சமுர்த்தி பெறுவோரின் மனோநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டமும் அமுலாகிறது. தற்சமயம் ஆறு லட்சம் பேர் சமுர்த்தி மானியம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பொசொன் வாரம் இன்று ஆரம்பமாகிறது.

பொசொன் வாரம் இன்று ஆரம்பமானது. அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹா போதிக்கு அருகில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பிரித் பாராயண நிகழ்வு இன்றுமுதல் ஏழு நாட்களுக்கு இடம்பெறவிருக்கின்றன. பிரித் பாராயண நிகழ்வு 40ஆவது வருடமாகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு பெரஹராவும் இடம்பெறவுள்ளது. 
 
மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய இடங்களில் பூரண அரச அனுசரணையில் பொசொன் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. பொசொன் தினத்திற்கு அமைவாக, பொலன்னறுவை மாவட்டத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. பொலன்னறுவை வருடாந்த தான நிகழ்ச்சி ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

வரவு - செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு அடுத்த மாதம் முதல்

 
 
 
 
புதிய சம்பளக் கொடுப்பனவை அடுத்த மாத ஓய்வூதியத்துடன் சேர்த்துக் கொள்ள முடியும் என்று ஓய்வூதியக் கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். 
 
2019ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்திற்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான சுற்றுநிருபம் மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஓய்வூதியம் பெறும் ஐந்து லட்சம் பேர் நன்மை அடைகிறார்கள். இரண்டு மாதங்களுக்குள் அதிகரிக்கப்பட்ட தொகையை வழங்குமாறு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.  

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 178 பேருக்கு இழப்பீடுகள்.

 
 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த 178 பேரின் குடும்பத்தவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீடுகளுக்கான அலுவலகம் அறிவித்திருக்கிறது. 
 
இழப்பீடுகளின் பெறுமதி 18 கோடி ரூபாவை தாண்டுகிறது. காயமடைந்த 345 பேருக்கு நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டிருக்கிறது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கு அமைய இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. 
 
தெமட்டகொட குண்டுவெடிப்பில் உயிரிழந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்காகவும் தலா பத்து லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவங்களினால் சேதமடைந்த மூன்று தேவாலயங்களையும் மறுசீரமைக்கவென இரண்டு கோடி 50 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் கூறுகிறது.  

இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில்

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு சங்-ரில்-லா, சின்னமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டல்களிலும் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் காயமடைந்தவர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டிவ தேவாலயத்தில் காயமடைந்தவர்களும், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சியொல் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலையை அமைதியான முறையில் தீர்க்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை மஹா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலையை அமைதியான முறையில் தீர்க்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை மஹா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். நாடு அரசியல்வாதிகளுக்கு அன்றி, பொதுமக்களுக்கே சொந்தமானதாகும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கொடபொல அமரகீர்த்தி தேரர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தமக்காக வேலை செய்வதற்காக மக்கள் பிரதிநிதிகளாக அவர்களை சில காலம் நியமிக்கின்றனர். அந்தப் பணியை அவர்கள் உரிய முறையில் விளங்கிக் கொண்டு பொறுப்புடன் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினரின் செயற்பாடுகளை கருத்திற் கொண்டு அவரை நீக்க வேண்டிய ஜனாதிபதிக்கு ஏற்பட்டதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கல்லேல்ல சுமனசிறி தெரிவித்தார்.

அர்ஜூன் மகேந்திரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பிணைமுறி விநியோக மோசடியுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உண்மைக்கான குரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அந்த அமைப்பின் சட்டத்தரணி ஷாப்திக்க வெல்லப்பல்லி இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

உலகின் வௌ;வேறு இடங்களிலும் மறைந்து வாழ்ந்த எல்ரிரிஈ பயங்கரவாதிகளை கைது செய்த இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வது பெரிய காரியம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அனுமதிப் பத்திரங்களின் பிரச்சினைகள் இருப்பின், விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், அது தொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் தபாலிடும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார். இவ்வருடம் புதிதாக அடையாள அட்டை பெறுவதற்கு மூன்று இலட்சத்து 95 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான வயதெல்லை 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெறாவிட்டால், அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் விரைவாக ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு வந்து திருத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் மாலைதீவு மீண்டும் இணைகிறது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் மீண்டும் இணைந்து கொள்ள மாலைதீவின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் இனிவரும் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுநலவாயப் போட்டிகளிலும் பங்குகொள்ள தீர்மானித்துள்ளதாக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட்; சொல்ஹியின் (ஐடிசயாiஅ ஆழாயஅநன ளுழடih) அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 115 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையில் இந்த இணைவு குறித்து ஜனாதிபதி அறிவித்துள்ளார். 1982ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி பொதுநலவாய நாடுகள் அமைப்பில் மாலைதீவு இணைந்தது. எனினும், உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி அந்த அமைப்பிலிருந்து மாலைதீவு விலகியமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் - ஜனாதிபதியின் தலைமையில் விசேட சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய்வது இதன் நோக்கமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ள

இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மாதம் இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அரை சதவீத வளர்ச்சியாகும் என சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இம்முறை இந்தியா, சீனா, பிரிட்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளிலிருந்து ஆகக் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருக்கிறார்கள்.

இந்தப் பயணிகள் மத்தியில் 25 சதவீதமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

உலகின் ஆகவும் பழைமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு

உலகின் ஆகவும் பழைமையான குகை ஓவியம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்தோனேஷியாவின் போர்னியோ தீவிலுள்ள குகை ஒன்றிலிருந்து காட்டு எருமை போன்றதொரு உருவதைக் குறிக்கும் செஞ்நிற ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறைந்தபட்சம் 40 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற குகைகளில் உள்ள விலங்குகளின் குகை ஓவியங்களுக்கு சமமானதாக காணப்படுகிறது.

ஒரு பகுதி வங்குரோத்து அரசியல்வாதிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாட்டிற்குள் குழப்ப நிலையை ஏற்படுத்த முயன்று வருவதாக பிரபல ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு பகுதி வங்குரோத்து அரசியல்வாதிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாட்டிற்குள் குழப்ப நிலையை ஏற்படுத்த முயன்று வருவதாக பிரபல ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால், நாட்டில் தற்சமயம் எதுவித பிரச்சினையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். மக்களின் அன்றாட வாழ்க்கையை குழப்புவதற்கு சில சக்திகள் முயன்று வருகின்றன. இதுகுறித்து, பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும். நாட்டில் தற்சமயம் அமைதியான நிலைமை காணப்படுகிறது. இந்த நிலைமையை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், திரு ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் நாட்டில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றன. அரசியல் அமைப்பின்படி, பாராளுமன்றத்தில் உயர்ந்தபட்ச விசுவாசத்தை கொண்ட ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு முழுமையான உரிமை உண்டு என்று இங்கு உரையாற்றிய சட்டத்தரணி ராஜா குணரட்ன தெரிவித்தார். பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை விட, உச்சளவு விசுவாசமே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஜனாதிபதி தமக்கு மிகவும் விசுவாசமான ஒருவரை பிரதமராக நியமிக்க முடியும் என்று அரசியல் அமைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

விமல் வீரவங்ச வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சராக பதவியேற்பு.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வீடமைப்பு மற்றும் சமூக நலனோம்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதேவேளை, சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான பந்துல குணவர்தன இன்று காலை தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். நாட்டின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தி, முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்த முடியும் என்று இங்கு உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பின் 40ஆவது சரத்துக்கு அமைய, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் விடயதான விபரங்கள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பொலிஸ் திணைக்களமானது, சட்டம், ஒழுங்கு அமைச்சின் கீழ் செயல்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்துக்கு வெற்றி.

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் எமிரேட்ஸ் சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்
நேற்று அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டி மின் விளக்கொளியில் பகலிரவு போட்டியாக நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து வீரர்கள் 9 விக்கட் இழப்பிற்கு 266 ஓட்டங்களை எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 48ஆவது ஓவரில் 219 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. நியூசிலாந்தின் சார்பாக ரொஸ் டெயிலர் 80 ஓட்டங்களையும், டொம் லத்தம் 68 ஓட்டங்களையும் பெற்றன

சட்டமா அதிபரை பதவி விலக்கிய அமெரிக்க ஜனாதிபதி.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சட்டமா அதிபர் ஜெஃப் செஷன்ஸை பதவி நீக்கம் செய்துள்ளார். செஷன்ஸின் சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ட்ரம்ப் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்க்கு ரஷ்யா உதவி செய்ததாக பரவலாக குற்றம் சுமத்தப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளிலிருந்து சட்டமா அதிபர் விலகியதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி அவரை கடுமையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.