Tue04072020

Last updateMon, 24 Feb 2020 8pm

Latest News

ஆடுகள நிர்ணய சூதாட்டம்: மூவர் இடைநிறுத்தம்

ஆடுகள நிர்ணய சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பணியாளர்களை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Read more...

இன்று இந்துக்களுக்கு வைகாசி விசாக நோன்மதி – பௌத்தர்களுக்கு பொசொன் பௌர்ணமி

இன்று இந்துக்களுக்கும் பௌத்தவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்.

இந்துக்கள் இன்று வைகாசி விசாக பூரணையாகக் கொண்டாடுகின்றார்கள். இன்றைய தினம் தீமைகளை அழிப்பதற்காக முருகப்பெருமான் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்த தினமாகக் கருதப்படுகிறது. இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெறும்.

Read more...

காலநிலை சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள் - அமைச்சர் பழனி திகாம்பரம்

சீரற்ற காலநிலையின் விளைவுகளால் நிர்க்கதியான பெருந்தோட்ட மக்களுக்கு கூடிய விரைவில் வீடுகளை அமைத்துக் கொடுக்கப் போவதாக மலைநாட்டு, புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Read more...

நாமல்-உயன பூங்காவை மத்திய கலாசார நிதியத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பிரசித்தி பெற்றுள்ள நாமல்-உயன பூங்காவை மத்திய கலாசார நிதியத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில் உள்ள இளஞ்சிவப்பு நிற பளிங்குப் படிகங்கள் சகலரையும் கவர்ந்திழுப்பவை. இதனை எதிர்கால சந்ததிக்காக பேணிப்பாதுகாப்பதற்கும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தலமாக அபிவிருத்தி செய்வதற்குமாக மத்திய கலாசார நிலையத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்தாக பூங்காவின் ஸ்தாபகர் சங்கைக்குரிய வனவாசி ராகுல தேரர் தெரிவித்தார்.

Read more...

வடக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றத்தை கண்டறிவதற்காக பிரதமர் நாளை மறுதினம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை கண்டறிவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். இ;நத அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மதிப்பீட்டு கூட்டம் பிரதமரி;ன் தலைமையில் அன்றைய தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட செயலகங்களில் நடைபெறவுள்ளது.

இ;ன்றும் நாளையும் மழை குவைடையும்.

இன்றும் நாளையும், கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இல்லையென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைய இருப்பதாகவும், திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எச்.எம்.பிரேமலால் தெரிவித்துள்ளார். மேற்கு, தெற்கு சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்த பிரதேசங்களிலும், மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றரைத் தாண்டடிய மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அனர்த்தம் மற்றும் தொற்று நோய்கள் காரணமாக சிறுவர்களை வெள்ளம் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென கோரிக்கை.

தற்பொழுது நிலவும் மழை மற்றும் வெள்ள நிலைமையுடன், திடீர் விபத்துக்களும், நோய்களும் பரவக்கூடிய அனர்த்தம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் சிறுவர்;கள் வெள்ளம் நிலவும் பிரதேசங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாமென்று சுகாதாரப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் உடம்பில் கொப்பளங்கள் போன்ற நோய் குணங்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி பபா பலிஹவதன தெரிவித்துள்ளார். கழிவுப் பொருட்;களை உரிய முறையில் அகற்றுதல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும், பொலத்தீன் வகைகளையும், சுற்றாடல் பகுதியில் வீசி எறிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எத்தகைய சுகாதார பிரச்சினைகளுக்கும் உடனடி நடவடிக்கைளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தயாராகவுள்ளது. பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு 24 மணித்தியாலமும் இதற்கென சுகாதார அமைச்சுடன் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும். தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 071- 01 07 107 ஆகும்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 17 உயிரிழந்துள்ளார்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால், கடந்த 16 ஆம் திகதி முதல் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று பொலிசார் அறிவித்துள்ளார்கள். ஒருவர் காணாமல் போயிருப்பதாக பொலிசார் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரம் ஒன்றுக்கு அடுத்த வருடம் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூனன் மாதம் முதல் ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றன

2019 ஆம் ஆண்டில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு;ககாக வெளியிடப்பட்ட சுற்று நிருபத்துடன் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தரம் ஒன்றிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வருமு; ஜூன் மாதம் முதல் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன.

இன்று வெளியான இரண்டு பத்திரிகை செய்திகள் பற்றி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்

சிவில் போராட்டத்திற்கான பின்னணியை உருவாக்கும் எந்த செயற்பாட்டுக்கும் இடமளிக்க வேண்டாம';. 'நாட்டை பிளவுபடுத்தும் வேலைத் திட்டம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் உசார்நிலையில்'.   ஆகிய தலைப்புக்களில் இரண்டு பத்திரிகையில் இன்று வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இவ்வாறான போலியான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கியது யார் என்பது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ரெயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் ரெயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பயணிகளுக்கு பொருத்தமான சேவையை வழங்குவதில் ரெயில்வே திணைக்களம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக ரெயில்வே வர்த்தக அத்தியட்சகர் என்;;.ஜே.இதிகொல்ல தெரிவித்துள்ளார். ரெயில்வே திணைக்களம் நாளாந்தம் 340 தடவைகள் ரெயில் சேவைகளை நடத்துகிறது. நாளாந்தம் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பயணிகள் ரெயில்களில் பயணிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

குடிவரவு குடியகல்வு உத்தியோத்தர்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை குடிவரவு குடியகழ்வு உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் குடிவரவு குடியகழ்வு உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. இவை குறித்து ஜனாதிபதி தீவிர கவனம் செலுத்தினார். அடுத்த வரும் நாட்களில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டம் கட்டமாக தீர்வு பெற்றுத்தரப் போவதாக அவர் உறுதியளித்தார்.

குடிவரவு குடியகழ்வு சேவையை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால நடவடிக்கை பற்றியும் நேற்றைய சந்திப்பில் ஆராயப்பட்டது. இந்த உத்தியோத்தர்கள் அற்றும் சேவைகளை ஜனாதிபதி பாராட்டிப் பேசினார்.

கிரிக்கெட் வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தையான தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் உறுப்பினர் சுட்டுக் கொலை


நேற்றிரவு இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் 8.30 அளவில் இடம்பெற்றது. காயமடைந்த மூவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 62 வயதான ரஞ்சன் சில்வா என்பது கண்டறியப்பட்டுள்ளது. திரு.சில்வா இரத்மலானை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் அங்கத்தவராவார். இவர் கிரிக்கெட் வீரர் தனஞ்சய சில்வாவின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து இலங்கை அணியின் கரீபியின் சுற்றுத்தொடரிலிருந்து விலகுவதாக தனஞ்சய சில்வா அறிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்திற்கான காரணமோ, சந்தேகநபர்கள் பற்றிய விபரங்களோ இதுவரை கண்டறியப்படவில்லை. கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை நடத்துகிறார்கள்.

சகல இலங்கையர்களுக்கும் அகில காப்புறுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு


இலவச சுகாதார சேவைகளின் கீழ் சகல இலங்கையர்களுக்கும் அகில காப்புறுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனராட்ன தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 71 ஆவது அமர்வில் சுகாதார அமைச்சர் உரையாற்றினார். இந்த அமர்வு கடந்த 21ம் திகதி ஆரம்பமானது. இது 28ம் திகதி வரை இடம்பெறும்.

இந்த அமர்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், சுகாதார சேவையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு அதனை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

தொற்று நோய்களையும் தொற்றா நோய்களையும் கட்டுப்படுத்தி, முதுமை அடையும் சனத்தொகை - உளவியல் சுகாதாரம் - புற்றுநோய் முதலான சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களுக்கு தாக்கம் - 38 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை எட்டுப் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அனர்த்தங்களினால் இதுவரை ஏழு பேர் காயமடைந்திருக்கிறார்கள். அடைமழை காரணமாக 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 38 ஆயிரத்து 46 பேர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஆறாயிரத்து 90 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தொள்ளாயிரத்து 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருக்கின்றன. 19 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மூன்று வர்த்தக நிலையங்களும், பிரதான ஐந்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் இடங்களும் சீரற்ற காலநிலையினால் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Read more...

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையினர் முன்வந்துள்ளார்கள்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள எட்டு மாவட்டங்களில் கடற்படையின் உயிர்ப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 38 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கமான்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார். வளல்லாவிட்ட, கலவான, நிக்கவரட்டிய, ஆனமடுவ, கிரிதலே ஆகிய பிரதேசங்களில் போக்குவரத்து பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள மக்களுக்காக கடற்படையினர் படகு மூலம் போக்குவரத்து சேவையை ஆரம்பித்துள்ளார்கள்.

Read more...

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் எந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் எந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் தொழில் வாய்ப்புக்கள் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்காது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இலங்கை பொறியியல் நிறுவகம், இலங்கை கட்டட வடிவமைப்பாளர்

Read more...

கிராமிய குளங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை.

கிராமிய குளங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் மறுசீரமைப்பு பணிகளை வலுவாக முன்னெடுப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

புhடசாலை மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த வேலைத் திட்டம் அமுல்படுத்தப்பட இருக்கிறது.

Read more...

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ ஊழியர் குழாம் பிரதம அதிகாரி ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ ஊழியர் குழாம் பிரதம அதிகாரி ஜெனரல் விஜின் ராவட், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது தொடர்பாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.

பயங்கரவாதத்தால் அழிவடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே யுத்த வீரர்களுக்கு வழங்கக்கூடிய கௌரவமாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


பயங்கரவாதத்தால் அழிவடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே யுத்த வீரர்களுக்கு வழங்கக்கூடிய கௌரவமாகும் என்று பிரதி அமைசசர் கருணாரட்ன பரணவிதான வலியுறுத்தினார்.

இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே பிரதி அமை;சசர் இதனைத் தெரிவித்தார். 30 வருடகால பயங்கரவாதத்தை முடிவிற்குக் கொண்டுவர உயிர் தியாகம் செய்த யுத்தவீரர்களுக்கு இந்த நாடு முழுமையான கௌரவத்தை வழங்கியுள்ளது. யுத்த வீரர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறக்கூடிய எந்தவொரு செயல்பாட்டிற்கும் அரசாங்கம் இடம் கொடுக்காது. பயங்கரவாத யுத்தம் முடிவடைந்ததும் நாட்டை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பி;ட்டார். யுத்தம் முடிவடைந்த பின்னரும் இதுவிடயம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பி;ட்டார்.