Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

Latest News

காணாமல் போனோர் தொடர்பாக காரியாலயம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டமை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வெளிக்காண்பிப்பதாக வலியுறுத்தப்பட்டுள்ளது

காணாமல் போனோர் தொடர்பாக காரியாலயம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டமை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வெளிக்காண்பிப்பதாக களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்; விரிவுரையாளர் சங்கைக்குரிய லெகும்தெனியே பியரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த காரியாலயத்தின் நோக்கம் எவருக்கும் அநாவசிய பாதிப்பை ஏற்படுத்துவது அல்ல. காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை கண்டறிவதே இந்த நிலையத்தின் முக்கிய நோக்கமாகும். காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களை வெளிக்கொண்டு வருவதும் மற்றுமொரு நோக்கமாகும். தகவல்களை அறியும் உரிமையை பலப்படுத்தும் வகையில் இந்தக் காரியாலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தேரர் எமது நிலையத்திற்கு தெரிவித்தார். இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே சங்கைக்குரிய பியரத்தன தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

காணாமல்போனோர்தொடர்பானகாரியாலயசட்டமூலத்திற்குஇணங்க, உறுப்பினர்கள்தெரிவுசெய்யப்பட்டமையானது, அரசியல்பின்னணியோஅல்லதுஇனவாதநோக்கம்கொண்டதாகஅமையவில்லைஎன்றும்இங்குகருத்துவெளியிட்டதொழிற்சங்கஒன்றியத்தின்அங்கத்தவர்சமிந்தகுணசிங்கதெரிவித்தார்

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்.

ஈரானிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலி லரிஜானி இலங்கை வந்துள்ளார்.

தமது வியட்நாம் விஜயத்தை பூர்த்தி செய்துக் கொண்டு இலங்கைக்கு வருகைதந்த ஈரானிய சபாநாயகரை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்கள்.

சபாநாயகர் அலி லரிஜானி இன்றும், நாளையும் இலங்கையில் தங்கியிருப்பார். இந்தக் காலப்பகுதியில் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவையும், சபாநாயகர் கரு ஜயசூரியவையும் அவர் சந்திப்பார்.

நாட்டில் எதுவித உரத் தட்டுப்பாடும் கிடையாதென அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அறிவிப்பு.

நாட்டில் எதுவித உரத்தட்டுப்பாடும் கிடையாது என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் உர விநியோகத்தில் எதுவித தட்டுப்பாடும், தாமதமும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது. சகல விடயங்களையும் கணனிமயப்படுத்தி வருவதால் ஊழல் மோசடிகளுக்கும் இடமில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

யூரியா, ரிஎஸ்பி, எம்ஓபி, எஸ்ஏ என்ற சகல வகை உரங்களும் 1500 ரூபாவுக்கு குறைவான விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். ஒரு பொதி யூரியாவின் விலை மூவாயிரத்து 500 ரூபாவாக இருந்தால் அரசாங்கம் இரண்டாயிரம் ரூபாவை பொறுப்பேற்கும். அதேபோன்று நெற்செய்கைக்கான உரப்பொதிக்கான செலவில் மூவாயிரம் ரூபாவை அரசாங்கம் ஏற்கிறது என அமைச்சர் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், தொலைபேசி ஊடாக அறிவிக்கலாம். அழைக்க வேண்டிய இலக்கம் 011-303-6666 என்பதாகும்.

கியூபாவிற்கு புதிய தலைவர்.

கியூபாவின் தேசிய மக்களவை நாட்டை வழிநடத்தக்கூடிய அடுத்தத் தலைவரை பிரேரித்துள்ளது. இதன் பிரகாரம் ராவுல் கெஸ்ட்ரோவுக்குப் பின்னர் மிகெல் டயஸ் கெனல் என்பவர் கியூபாவின் தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளார். இவர் சமகால துணை ஜனாதிபதியாவார். ராவுல் கெஸ்ட்ரோவின் வலது கரமாகவும் வர்ணிக்கப்படுகிறார். கியூபாவின் அடுத்தத் தலைவரை பிரேரிப்பதற்கான வாக்கெடுப்பில் நேற்று மிகெல் டயஸ் தெரிவு செய்யப்பட்டார். இன்று பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்ததும், ஜனாதிபதி பதவியை ராவுல் கெஸ்ட்ரோ, மிகெல் டயஸிடம் முறையாக ஒப்படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உள்ளுர் மெய்வாண்மை போட்டியாளர்கள் வெளியூர் போட்டிகளில் பங்கேற்பது அவசியம் என தேசிய ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு.

இலங்கையின் மெய்வாண்மைப் போட்டியாளர்கள் வெளிநாட்டுப் போட்டிகளில் கூடுதலாக பங்கேற்பது அவசியம் என தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் வீர வீராங்கனைகள் ஆகக் கூடுதலான பதக்கங்களுடன் நாடு திரும்பியதை அடுத்து, அவர் கருத்து வெளியிட்டார். ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் அடங்கலாக ஆறு பதக்கங்களுடன் இலங்கை போட்டியாளர்கள் நாடு திரும்பினார்கள். அவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் இன்று இடம்பெறவுள்ளது.

35 வருடங்களின் பின்னர் சவூதி அரேபிய மக்களுக்கு திரைப்படம் பார்க்க சந்தர்ப்பம்.

சவூதி அரேபிய மக்களுக்கு மீண்டும் திரைப்படம் பார்க்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. 35 வருடங்களின் பின்னர் நாளை ரியாத் நகரில் சினிமா மண்டபம் ஒன்று திறக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 15 நகரங்களில் 40 சினிமா திரையரங்குகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதத் தலைவர்களின் ஆலோசனைபடி சவூதி அரேபியாவில் 1980ஆம் ஆண்டு திரைப்படம் தடை செய்யப்பட்டது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் மேற்கொண்டுவரும் திருத்தங்களின் ஒரு நடவடிக்கையாக மீண்டும் அந்நாட்டில் சினிமா திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன.

இலங்கை உதைப்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் இன்று முதல்.

இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் இன்று முதல் ஆரம்பமாகும் என்று இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார். பெத்தகான தேசிய உதைப்பந்தாட்ட மைதானத்தில் ஏ மற்றும் பி பிரிவுகளின் கீழ் பயிற்சி வழங்கப்படும். பாடசாலை மட்டத்திலான நான்கு வீரர்களும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தேசிய உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் ரூமி ஃபக்கீர் அலி தலைமையில் பயிற்சிகள் வழங்கப்படும்.

பிணை நிபந்தனைகளை நிறைவேற்றியதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுதலை.

பிணைக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றி பிணையில் கைச்சாத்திட்டதன் பின்னர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். இவரின் கடவுச்சீட்டு தற்போது மேல்

Read more...

நாட்டின் அரசியல் கலாசாரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும கூறுகிறார்.

சுதந்திரத்தின் பின்னர் பல வருடங்கள் நாட்டில் இருந்துவந்த அரசியல் கலாசாரத்தை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்துவந்த முறையை மாற்றி

Read more...

ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தத் தீர்மானம்.

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுப்பினரின் இலக்கமாக பயன்படுத்துவதற்கு தொழிலாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக தொழிலாளர் மற்றும் தொழில் வழங்குநர்களின் விபரங்கள் அடங்கிய விபரங்களுடன் திணைக்களத்தின் கணினியில் தரவுகளை புதுப்பிக்கும் பணிகள் தற்போது

Read more...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் சேவையில்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று சேவைக்கு சமூகமளித்திருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கடந்த காலத்தில் ஏற்பட்ட தாமதத்தை அவர்களின்

Read more...

இந்தியப் பிரதமர் சுவீடன் மற்றும் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுவீடன், பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். நாளை இவர் சுவீடனில் ஸ்டொக்ஹோமில் சுவீடன், பின்லாந்து, நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை இந்தியப் பிரதமர் பிரித்தானியாவுக்கு செல்லவுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு ஆஜர்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று காலை பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு வந்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சராக இரு;நத காலத்தில் கரம்போர்ட் மற்றும் டாம் போர்ட் கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக வருமாறு அவருக்கு பணிக்கப்பட்டிருந்தது. இந்த கொடுக்கல் வாங்கலில் ஐந்து கோடி 90 லட்சம் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி லண்டன் நகரை சென்றடைந்தார்.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இணைவாக வர்த்தகம், மகளிர், இளையோர் மற்றும் மக்கள் சார்ந்த நான்கு மாநாடுகள் இடம்பெறவுள்ளன.

Read more...

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச வைபவம் சபாநாயகர் தலைமையில் அத்தனகல்லயில்.

புத்தாண்டு பிறப்பின் தலைக்கு எண்ணெய் வைக்கும் சுபநேரம் இன்று காலை 10.16க்கு இடம்பெற்றது. இம்முறை இந்த தேசிய நிகழ்வு அத்தனகல்ல ரஜமஹா விகாரையில் நடைபெறவுள்ளது.

Read more...

தமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்ல வேண்டாமென பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தல்.

தமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நீராடச் சென்று உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. கடந்த வருடம் இவ்வாறான 727 மரணங்கள்

Read more...

ஜனாதிபதி சித்திரைப் புத்தாண்டு சம்பிரதாய நிகழ்வுகளில் நாளைய தினம் கலந்துகொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சித்திரைப் புத்தாண்டு சம்பிரதாய நிகழ்வுகளில் நாளைய தினம் கலந்துகொள்ளவுள்ளார். நாளை கொழும்பில் உள்ள மாகம சேகர மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சம்பிரதாய நிகழ்வுகளில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதற்கு பொதுமக்களுக்கும் இங்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புதுவருடத்தை வரவேற்க இலங்கை மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக புத்தாண்டுக்கு பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களால் பிரதான நகரங்கள் நிரம்பி வழிந்ததை காணக்கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

புத்தாண்டுக்காக ஊர் திரும்பும் பயணிகளின் நலன்கருதி போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினமும் பிரத்தியேக சேவைகள் நடத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையும், ரயில்வே திணைக்களமும் அறிவித்துள்ளன.

சூரிய பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு செல்லும் சித்திரைப் புத்தாண்டு, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நாளை காலை 7.03க்கு உதயமாகிறது.

தமிழர்களின் 60 வருட கால சக்கரத்தில் நாளை விளம்பி வருடம் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் காலை 7.03ற்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி காலை 08.13ற்கும் புதுவருடம் பிறப்பதாக சோதிடர்கள் கணித்துள்ளார்கள்.
வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், வெள்ளிக்கிழமை பின்னிரவு 02.50 தொடக்கம் நாளை முற்பகல் 10.50 வரையிலும், திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம் நாளை அதிகாலை 04.13 தொடக்கம் நண்பகல் 12.13 வரை விஷூ புண்ணிய காலமாகும்.
நாளைக் காலை 10.45 தொடக்கம் நண்பகல் 12.10 வரையிலும், பகல் 01.05 தொடக்கம் 02.10 வரையிலும், திங்கட்கிழமை முற்பகல் 10.15 தொடக்கம் 10.55 வரையிலும் கைவிசேஷம் செய்யலாம்.

புத்தாண்டு காலத்தில் நீலநிறப் பட்டாடை அல்லது நீலக்கரை வைத்த வெண்ணிற புதுவஸ்திரங்கள் அத்துடன் நீலக்கல் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிவது சிறந்தது என சோதிடர்கள் கணித்துள்ளார்கள்.

நாடு முழுவதும் இடம்பெறும் சித்திரைப் புத்தாண்டு விசேட நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இம்முறையும் நேரடியாக ஒலிபரப்புச் செய்ய தயாராகியுள்ளது.

நாடு முழுவதும் இடம்பெறும் சித்திரைப் புத்தாண்டு விசேட நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இம்முறையும் நேரடியாக ஒலிபரப்புச் செய்ய தயாராகியுள்ளது. கடந்த வருடங்களை போன்று இந்த வருடமும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சிங்கள தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளை நேரடியாக ஒலிபரப்புச் செய்வதற்கு இலங்கை வானொலி ஏற்பாடுகளை செய்துள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவைகள் ஊடாகவும் இந்த நிகழ்வுகளை ஒலிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் நண்பகல் 12.35 வரை சிங்கள தேசிய சேவை ஊடாகவும், பிராந்திய சேவைகள் ஊடாகவும் இந்த நிகழ்வுகள் ஒலிபரப்புச் செய்யப்படும். சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்படும்.

இதேவேளை, சரித்திரப் புகழ்மிக்க ருஹூனு கதிர்காம மஹா தேவாலயத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா நாளை இரவு இடம்பெறும். நாளை மாலை 6.30க்கு இந்த விழா ஆரம்பமாகும். ருஹூனு கத்தரகம தேவாலய வளாகத்தில் இந்த சித்தரைப் புத்தாண்டு விழா நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பமாகும் என்று தேவாலயத்தின் பிரதம அரங்காவலர் சொமிபால ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

புதிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னெடுத்துச் சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதாக பிரதமர் அறிவிப்பு

புதிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னேக்கி இட்டுச் சென்று மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் போவதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தகைய வேலைத்திட்டம் பற்றி ஜனாதிபதியுடனும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்களான அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பிரகாரம் வேலைத்திட்டத்தை துரிதமாக அமுலாக்கப் போவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Read more...

சர்வதேச அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்திற்கான கிராக்கி நாளுக்கு அதிகரிப்பு

சர்வதேச அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்திற்கு உள்ள கிராக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read more...

அரசாங்கத்திலிருந்து 16 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் விலகல்

தாம் அடங்கலாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 16 பேர் அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து கொள்ளப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க அறிவித்துள்ளார்.

Read more...