Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

Headliens

 

Latest News

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி.

நேற்று  போட் ஒவ் ஸ்பெயின்  மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய வீரர்கள், மேற்கிந்திய அணியை 105 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளார்கள். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய வீரர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தார்கள். இந்தியாவின் சார்பில் அஜின்தியா ரெஹானே ஆகக்கூடுதலாக 103 ஓட்டங்களை எடுத்திருந்தார். மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டிருந்தன.

உலக வாழ் முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துச் சொல்லும் டொனால்ட் ட்ரம்ப்.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்கள் சார்பில் தாமும் தமது மனைவியும் நல்வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதாக ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பெருநாள் கருணை, அன்பு, நல்லெண்ணம் போன்ற நற்குணங்களின் முக்கியத்துவத்தை போதிக்கிறதென அவர் கூறுகிறார். எவ்வாறேனும், இம்முறை வெள்ளை மாளிகையில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி இடம்பெறவில்லை. முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆட்சிக் காலத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் வெள்ளை மாளிகையில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி இடம்பெறுவது வழக்கமாக இருந்தது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறன்றனர்.

நாடெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் இன்று ரமழான் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வாழ்த்துச் செய்தியை விடுத்துள்ளார். ரமழான் பெருநாளின் ஊடாக கூறப்படும் செய்தியானது அகிலம் முழுவதிற்கும் பொருத்தமானது. ரமழான் மாதத்தில் பரபஸ்பர கௌரவம், சமத்துவம், தியாகம், ஏழைகளுக்கு உதவுதல் முதலான நற்குணங்களை முஸ்லிம்கள் முழு அர்ப்பணிப்புடன் அனுசரித்து நடப்பார்கள். இந்தத் திருநாள் மத ஆன்மீக சமூக முன்மாதிரிகளின் அடிப்படையில் சகலரும் சகலருக்கும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்பது எதிர்பார்கக்ப்படுகிறது. தமக்கு நேர்மையாக இருந்து மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதன் மூலம் மனிதத்தை மேம்படுத்த முடியும் என்பதை ரமழான் பாரம்பரியங்கள் உணர்த்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கிலும் நட்புறவு, சகவாழ்வு போன்றவை பற்றிய ஆழமான உணர்வுடன் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுவதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மதப் போதனைகளை அனுசரித்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு தியாகத்துடன் நோன்பு நோற்ற காலம் ரமழான் பெருநாளுடன் முடிவடைகிறது. இந்த நோன்பானது மதத்தின் மீதான உள, உடல் அர்ப்பணிப்பை ஊக்குவிப்பதுடன் குடும்பங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து இஸ்லாத்தின் புனித விழுமியங்களை புதுப்பிக்க உதவுகிறதென பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ரமழான் நோன்புப் பெருநாள் பகிர்ந்து தியாகம் செய்து வாழும் பாரம்பரியத்துடன் எமது வாழ்வில் சகோதரத்துவத்தை மேம்படுத்துகிறதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் விடுத்த வாழ்த்துச் செய்தியில் மன மகிழ்ச்சியுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் வரம்புகளுக்கு உட்பட்டு நெருக்கமான உறவைப் பேணுவது அவசியம் என கூறியுள்ளார். முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் நோன்பு பெருநாள் களைகட்டியிருப்பதாக எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையும் இன்று விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இன்று தொடக்கம் மாலை நேரச் செய்திகள் வழமைபோல் 6 மணிக்கு ஒலிபரப்பாகும்.

போதைப் பாவனையில் இருந்து எதிர்கால சமூகத்தினரை விடுவிக்கும் நோக்கில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்துள்ள விசேட செயலமர்வு இன்று.

 

போதைப்பொருள்பாவனையற்றஎதிர்காலசமூகமொன்றைஉருவாக்கும்நோக்கில்நாடுமுழுவதிலும்உள்ளவிஹாரைகளைக்கேந்திரமாகக்கொண்டுநடத்தப்பட்டுவரும்போதைப்பாவனையில்இருந்துவிடுவிக்கப்பட்டநாடுஎன்றசெயலமர்வின்மற்றுமொருசெயலமர்வுகுருநாகல்வரலாற்றுசிறப்புமிக்கஅத்ஹந்தரஜமஹாவிஹாரையில்இன்றுஇடம்பெறவுள்ளது.

Read more...

டெங்கு நோயைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

 

 

டெங்குநோயைஒழிப்பதற்குதேவையானநடவடிக்கைகள்பலமேற்கொள்ளப்பட்டிருப்பதாகஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனதெரிவித்திருக்கின்றார். கடந்தசிலவருடங்களுடன்ஒப்பிடுகையில்டெங்குநோய்வேகமாகபரவிவருவதைக்காணக்கூடியதாகஉள்ளது. காலநிலைமாற்றம்,

Read more...

அனைத்து மதங்களையும் உள்ளடக்கும் வகையில் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய அரசாங்கம் தலைமையில் விசேட சபையொன்று நியமிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை மஹாசங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்து மதங்களையும் பிரதிநிதித்தக்கூடிய வகையில் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய அரசாங்கம் தலைமையில் விசேட சபையொன்று நியமிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிறி மஹாசங்க சபையின் மஹாநாயக்கர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்; மேற்கொண்ட நாடு தழுவிய வேலைநிறுத்தம் முடிவுற்றுள்ளது.


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்; மேற்கொண்ட நாடு தழுவிய வேலைநிறுத்தம் முடிவுற்றுள்ளது.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

Read more...

பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சுகாதார அமைச்சின் கட்டிடத்திற்குள் பிரவேசித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் பொலிஸ் விசாரணை.

பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சுகாதார அமைச்சின் கட்டிடத்திற்குள் அத்துமிறிப் பிரவேசித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் பொலிஸ் விசாரணை இடம்பெறுகிறது.

மருதானை பொலிஸ் மற்றும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான றுவன் குணசேகர எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

Read more...

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி