Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

Massege of Chairman

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இலத்திரனியல் தொலைத்தொடர்பாடலில் முதன்மையான முன்னோடி ஊடக வலயமைப்பாக் நேயர்களை இலக்காக கொண்டு அந்தந்த சமூகங்களின் தேவைகளை இனங்கண்டு “வசதிகளை வழங்குபவர்” என்ற ரீதியில்; கிராமிய மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி மக்களின் இதயத்துடிப்பாக மாறியிருக்கின்ற இலத்திரனியல் அலைவரிசை இலங்கை வானொலியாகும்.

ஸ்ரீவஜிர ஞான தேரரின் தர்ம போதனையூடன் ஆரம்பமான சிங்கள பேச்சுக்களை; அன்று முதல் இன்று வரை மக்களின் உள்ளங்களுடன் நெருக்கச் செய்ததும் இலங்கை வானொலியாகும். வானொலி நாடகங்கள்இ செய்தி அறிக்கைஇ தொலைபேசி உரையாடல்கள்இ கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்இ சுபாரதிஇ முவன்பலசஇ ரகமடலஇ பிபிதென காயக்கபரபுர போன்ற மக்கள் மனங்களை வென்ற பல்வேறு நிகழ்ச்சிகளையூம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே ஒலிபரப்ப முடிந்தது.

ஆசியாவின் எமது முதலாவது வானொலி பயிற்சி நிறுவகத்தில் பயிற்சி பெற்றவர்களே இலத்திரனியல் ஊடகங்களின் முக்கியஸ்தர்களாக இன்று செயற்படுவதற்கான காரணம் எம்மிடம் பெற்ற பயிற்சிகளாலேயோகும். நம்பகத்தன்மைஇ தொடர்ச்சியான ஊடக பணிஇ என்பனவற்றின் ஊடாக உங்களுடன் நெருங்கி செயற்பட்டு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சர்வதேசத்துடன் இணைவதற்கான வாய்ப்பு இன்று முதல் ளுடுடீஊ இணையத்தளத்தின் ஊடாக கிடைக்கிறது.


இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தை புதுப்பித்து வினைத்திறனான முறையில் மூன்று மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் இந்த சந்தர்ப்பத்தில்; இலத்திரனியல் ஊடகத்துறையில் முன்னோடி நிறுவனம் என்ற ரீதியில் நீண்டகாலம் சேவையாற்றிய நாம் தகவல் தொழில்நுட்பத்தோடும் இணைந்ததன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமானதாகும் என நாம் கருதுகிறௌம்.