பணிப்பாளர் நாயகத்தின் செய்தி

பாரம்பரிய ஊடக முறைமை இன்று சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இணையத்துறையுடன் இணைந்ததான புதிய ஊடகப்பரிமாணத்தின் தோற்றமே இதற்குக்காரணமாகும்.ஓருவருக்கொருவரிற்கிடையேயான தகவல் பரிமாற்றமானது மக்கள் தொடர்பாடல் வரை படிப்படியாக மாற்றமடைந்தது .இன்று மக்கள் சமூகத்தொடர்பாடலானது மீண்டும் ஒருவருக்கொருவர் இடையேயான தொடர்பாடல் முறையாக இணைய வலையமைப்புத் துறைப்புரட்சியடன் பரிணமித்துள்ளதுடன். பாரம்பரிய ஊடகமுறை தன் பணியில்  மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களையும் அது உணர்த்தி நிற்கின்றது.
 
நெட்டலை, மத்திய அலை, சிற்றலை, மற்றும் பண்பலைவரிசைகளில் இயங்கிய வானொலிக்கு புதிய ஊடகக களத்தையும் உள்வாங்கவேண்டியதாய் இருப்பது இதனாலேயாகும்.
 
நவீன உலகின் புத்தம் புதிய மாற்றங்களுடன்  முன்னோக்கிச்செல்லும் பொருட்டு 
இலங்கை.
 
ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்  www.slbc.lk  எனும் இணையத்தளத்தினூடாக  நேயர்களுடன் பிணைப்பினை ஏற்படுத்துகிறது.