Sri Lanka Brodcasting Corporation

Fri12152017

Last updateThu, 14 Dec 2017 9pm

Latest Posts

வடக்கு ஊடகவியலாளர்கள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்கு விஜயம்

தகவல் மற்றும் ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பனையோலையும் எழுத்தாணியும் " வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்களின் நல்லிணக்கப்பயணத்தின் இரண்டாவது கட்டமாக வடபகுதி ஊடகவியலாளர்கள் ஜூலை 7 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.

 

கூட்டுத்தாபன தலைவர் சட்டத்தரணி நந்தமுருத்தெட்டுவேகம மற்றும் பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாரச்சி ஆகியோர் தலைமைமயில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை பிரிவினரால் வடபகுதி ஊடகவியலாளர்கள் வரவேற்கப்பட்டதுடன் இசைவிருந்தும்  வழங்கப்பட்டது. இலங்கையின் மூத்த பாடகர் சூரியகுமார் வி. முத்தழகு மற்றும் இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபன தென்றல் வானொலி நடாத்திய தென்றல் சிங்கிங் ஸ்டார்  சீசன் 1இல் நட்சத்திரமாகிய  சித்தாரா மதுஷாணி மற்றும் இசைப்பிரிவு தயாரிப்பாளர் சிவஷங்கர் கணேஷன் ஆகியோர் இசை விருந்து வழங்கினர். பிரதி பணிப்பாளர் நாயகம்(நிகழ்ச்சிப்பிரிவு)திரு மதி மயூரி அபேசிங்க, தமிழ்ச்சேவைப்பணிப்பாளர் ஆர் .கணபதிப்பிள்ளை,  கட்டுப்பாட்டாளர் ஆர் யோகராஜன், விஷேடதர அறிவிப்பாளர் சனூஸ் மொஹமட் பெரோஸ் மற்றும் ஓலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ப்பிரிவு ஒலிபரப்பாளர்களும் வட பகுதி ஊடகவியலாளர்களை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Listen Live