Sri Lanka Brodcasting Corporation

Sat08192017

Last updateSat, 19 Aug 2017 2pm

About Thendral FM

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வலையமைப்பிலிருந்து உலகெங்கும் ஒலிக்கும்
உலகத்தமிழ் பேசும் நெஞ்சங்களின் பேச்சிலும் மூச்சிலும் நிறைந்த முதற்தர முழுநேரத் தமிழ் பொழுதுபோக்கு வானொலியாக தென்றல் எப் எம் விளங்குகின்றது.

யாதினும் வல்லதொரு சித்தாகின்பமாய் பழமையின் பாதுகாவலனாய் புதுமையின் பிரதிநிதியாய் விளங்கும் தென்றல் எப் .எம் முழுநேர பொழுது போக்கு அம்சங்களுடன் மனம்கவர் நிகழ்ச்சிகளைத்தந்து நேயர்களை மகிழ்விக்கும் வண்ணம் தரத்தில் முதன்மையாய் தமிழில் அமுதமாய் வானலையில் தென்றலாய் தவழ்ந்து நேயர்களை மகிழ்விக்கின்றது.

பலவேறு தரப்பினரும் பயன்பெறும்வகையில் அன்றாடம் தேவைப்படும் தகவல்களுடன் உலக நடப்புக்கள் , பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டுத்தகவல்கள், பாடல்கள், போட்டிகள் என்பனவற்றுடன் முழுமையான இசையால் இதயம் தொடும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

அதிகாலை வேளை பக்தி கீதங்களுடன் ஆரம்பித்து மனம் துள்ளும் இனிய பாடல்களை அள்ளிவழங்கி தெறிக்கும் இசையால் தொடர்ந்து மனதை ஆர்ப்பரித்து உணர்வுகளைத்தாலாட்டும் இரவின் மடியிலுடன் இதயங்களை அமைதிப்படுத்தி உறக்கம் கொள்ள வைக்கிறது.

எந்த ஓரு வானொலிக்குமில்லாத தனித்துவமான செம்மொழியால் நிறைந்த உரையாடல்களால் பல்சுவை அம்சங்களை நேயர்களிடம் கொண்டு சேர்ப்பதுடன்
எண்திசை தாண்டி கடல் அலை தீண்டி கடல் கடந்த தேசம் என விண்ணெங்கும் வாசமாய் தீந்தமிழால் தமிழ்பேசும் நெஞ்சங்களை பொங்குமின்பத்தால் நிறைக்கிறது.

Listen Live